கனவே கலைந்து விடு
______________________
ஆங்கிலேயன் கட்டியக் கோட்டை,
ஓங்கி உயர்ந்திருக்க,
அதிலே ஒய்யாரமாய்
நான் முதல்வனாய் அமர்ந்திருக்க
சாதி சண்டைகள் இல்லை,
மொழிப்பூசல்கள் இல்லை,
மத இன்னல்கள் இல்லை,
அமைதிப் பூங்காவாய்
தமிழகம் மிளிர
பாரம்பரியம், பண்பாடு தழைத்தோங்க ,
தமிழன் நிமிர்ந்து நடக்கிறான்,
உலகமே பாராட்டி பேசிடும் காட்சி
பஞ்சம் இல்லை,
பசியும் இல்லை,
அணைகள் பல கட்டி விட்டோம்,
மழைநீரை சேகரித்தோம்,
வேளாண்மைக்கு வித்திட
தன்னிறைவு பெற்றுவிட்ட தமிழகமாய்,
மிளிர்ந்ததே, இந்திய நாட்டில்
தமிழ் ஒளி சுடர் விடுகிறதே!
நல்லக்கல்வி கொடுத்து,
விவசாயக் கடன் கொடுத்து
இலவசம் என்பதை நிறுத்திவிட்டு
உழைத்து வாழக் கற்றுக் கொடுத்தேன்,
என் மக்கள் செழித்திருக்க
கனவே கலைந்து விட
விழித்துப் பார்த்தேன்,
குப்பைத் தொட்டியில் நான் கிடந்தேன்.
----------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Sunday, 5 November 2017
கனவே கலைந்து விடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment