Wednesday, 22 November 2017

கிராமத்து கிளிகள்

கிராமத்துக் கிளிகள் ___:
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆடி மாசம் வந்துருச்சி,
ஆடி காத்தும் அடிச்சிருச்சி,
அம்மிக் கல்லும் நகர்ந்துடுச்சி
அடிவாடி கிளியே! வெளியே !

பஞ்சவர்ண கிளிகளே,
பஞ்ச பாண்டவர்கள் நாங்களடி,
மாமனுங்க கூப்பிடுறோம்,
கூட்டை விட்டு வாங்க வெளியே!

பஞ்சவர்ண தாவணி பாவாடையில்
கொலுசு சத்தம் கலகலக்க
ரெட்டச் சட போட்டுண்டு
தத்தி தத்தி வரும் பைங்கிளிகளே!

ஆற்றுப் பக்கம் போகலாம்,
காலார நடக்கலாம்
குமட்டிப்பழம் தின்னலாம்,
காதல் கதை பேசலாம்,

தோளோடு தோள் சாயலாம்,
தோழனுக்கு தோழி ஆகலாம்,
சுதந்திர கிளிகளாக
கிராமத்து கிளிகளும் பறக்கலாம்

கொஞ்சி கொஞ்சி பேசிடலாம்
அவரவரின் ஜோடியுடன் - இது
என்றும் நினைவாய் போச்சு
கிராமத்துக்கிளிகள் பறந்தும் போச்சு,
நகரத்து நாகரிகம் வளர்ந்துபோச்சு
பாவாடை தாவணி மறைந்துபோச்சி
கிராமத்துக்கிளிகளோ - இன்று
நகரத்துக் கிளிகளாக

No comments:

Post a Comment