Wednesday, 22 November 2017

ஓலைச்சுவடி

ஓலைச்சுவடி!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
மையில்லை, எழுத்தில்லை,
எழுதுகோலும் இல்லை,
கவிகள் பல படைத்தனர்,
பனை ஓலையிலே,
ஓலைச்சுவடியிலே!

என்றும் அழியாத எழுத்தோவியம்,
அரிய பொக்கிஷம்,
தமிழ் மொழியின் வைரங்கள்
கவிகளின் கை வண்ணத்தின்
முத்துக்கள்,

கடல் போன்ற தமிழிலே
மூழ்கி முத்தெடுத்தவர் சிலரே!
அந்த முத்துக்கள்
ஓலைச்சுவடிகளாய்,
காலத்தை வென்று நிற்கிறது,

உலகை வென்ற திருக்குறள்,
பஞ்சலோகத்தையும்
எடை போடும் ஐம்பெரும்காப்பியங்கள்,
எந்தக் காலத்தையும்
கடந்து நிற்கும்
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு,
என எழுதி குவித்த
கவி சக்கரவர்த்திகளின்
ஆயுதம் ஓலைச்சுவடி,

பிரிக்க முடியாதது
தமிழையும் ஓலைச்சுவடியும்,
சேர்ந்தே இருப்பது
கவிகளும் ஓலைச்சுவடிகளும்,
மனிதர்களின்
தலையெழுத்துக்களின் அரியாசனம்,
மாந்தர்தம் சிந்தனைகளின்
பாதுகாவலன்.

காலங்கள் மாறியது,
காட்சிகளும் மாறியது,
கணினி வந்தது,
தட்டச்சு செய்தே
ஓலைச்சுவடி ஒழிந்தது,
எங்கோ ஒரு திசையில்
புழுதி படிந்த நிலையில்
தமிழைக் காத்து நிற்கும்
காலத்தின் சின்னம் ஓலைச்சுவடி!
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment