இந்த நிலை மாறுமா
- - - - - - - - - - - - - - - - - - - -
கோவில்களில் பிச்சைக்காரர்கள் கூட்டம்,
வரிசைக்கட்டி நிற்கிறது.
சாலை நெரிசலிலே பிஞ்சுக் குழந்தைகள்
திருவோடு ஏந்தியே நிற்கிறது,
குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்தும்
கூட்டமும் இங்கே அலையுது,
பஞ்சம், பட்டிணியின் கொடுமையால்
இந்தக்கூத்தும் நடக்குது,
என்று இந்த நிலை மாறுமோ?
என்று என் மனமும் கொதிக்குது!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment