இளமைக் காலங்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
தொட்டில் கட்டி ஆடியக்காலம்,
ஊஞ்சல் கட்டி ஆடியக்காலம்
பயம் என்பதே தெரியாக்காலம்,
என் நெஞ்சில் நிலைத்தக்காலம்,
என் இளமைக் காலங்கள்!
இது ஒரு இனியக்காலம்,
நான் பட்டாம்பூச்சியாய் பறந்தக்காலம்,
எங்கள் ஊர் குளம்அது
நண்பர்களுடன் நீச்சல் பழகிய குளம்,
பள்ளிச்செல்லும் வழியில்
இலந்தை பழம்பறித்து ருசித்தக்காலம்
பள்ளிக்கு செல்லாமலே
காடுகளில் பதுங்கியக்காலம்,
ஆலமர விழுதுகளில் தொங்கியே,
ஊஞ்சல் நாங்கள் ஆடினோம்,
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்
எங்களுக்கு இல்லை திண்டாட்டம்,
கவலைகள் தெரியாத பருவம்அது,
துக்கங்கள் காணாத காலம்அது,
பட்டாம்பூச்சியாய் சில பேர்,
துள்ளித்திரியும் ஆட்டுக்குட்டியாய் சிலபேர்,
காட்டாறு வெள்ளமாய் பலபேர்,
கூண்டில் சிக்கிய எலியாக சிலபேர்,
கலைமானாய் ஓடும் பலபேர்,
ஒரு துள்ளும் ஆட்டுக்குட்டியாய் சிலபேர்
நானோ பட்டாம்பூச்சியாய்,
பறந்திட்டக்காலம் என் இளமைக்காலம்.
----------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment