Wednesday, 22 November 2017

எழுத்துப் பிழைகளாய் முடிகின்ற வருடம் என் கவிதையில்,

எழுத்துப் பிழைகளாய் முடிகின்ற
வருடம் என் கவிதையில்,
வருட இறுதியில் கவி ஆர்வம் வந்தது,
முதல் கவிதையே எழுத்து பிழைகளாக,

தொடங்குகிறது புத்தாண்டு,
தேனாறாய் பாய்கிறது, என் தமிழமுது ,
கவிச் சாரல் ஊற்றெடுத்து
செவிச் சாரல் வற்றியே போனது

தேனாறும் பாலாறும் பாய்கிறது
என் விழி கவி செவி வழியே!
காவிரியும் கங்கையும் காய்கிறது
மாரியும் பொய்த்ததே - இது இறைவன் செய்யும் பிழை!

என் எழுத்தின் பிழையை திருத்த
நடுவர் இருக்க,
இறைவன் செய்யும் பிழையை
திருத்த யார் இருக்கா?

விளை நிலங்கள் வீடுகளாய்போனது,
மரமெல்லாம் காட்சி பொருளானதே!
மழையும் இல்லை! தண்ணீரும் இல்லை!
பட்டினியாய் போனதே உலகம்
இது மனிதன் செய்த தவறல்லவா !

No comments:

Post a Comment