நினைவெல்லாம் நீ
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
நினைவெல்லாம் நீ தூங்க மறந்தேன்,
மனமெல்லாம் நீ என்னை மறந்தேன் ,
உன் வாசம் வீசும் பாசத்தால்
பெற்ற உறவுகளை மறந்தேன்!
என்றும் உன் நினைவாய்,
எதிலும் உன் உருவமாய்,
கண் மூடி தூங்கையில்
கனவிலும் என்னை ஆட்கொண்டாய்!
கட்டுக்கடங்காத காளை ஒன்று
தாவணியை சுற்றி வந்தது.
மனம் கொத்திப் பறவையாய்
என் மனதை கொத்திச் சென்றது,
தேனும் பாலும் கலந்த கலவை நீ
அந்த அமிர்தம் கூட தோற்றுவிடும்,
உன்னை நினைக்கையில்,
பஞ்சலோகமும் உன் முன் வந்தால்
தானாய் தோற்று பின்வாங்கிடும்
உன்னை நினைக்கையில்
தமிழமுது கூட கொட்டுதடி,
காதல் ரசம் சொட்டுதடி,
கவி சிந்துதடி,,
நினைவெல்லாம் நீ இருக்க
சந்திரன் கூட தோற்றுவிடுவான்,
ஒளி வீச மறந்திடுவான்.
______________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment