Wednesday, 22 November 2017

அழியாத நினைவுகள்

அழியாத நினைவுகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
பாசத்தை காட்ட தாயும் இல்லே
அறிவை கொட்ட தந்தையும் இல்லே
உறவுக்கென்று யாரும் இல்லே
நான் வாலிபனும் இல்லே - குழந்தை

அன்பை சொறிய பாட்டியும் உண்டு
அறிவனையை திறக்க தாத்தனும் உண்டு
தூக்கி கொஞ்ச மாமனும் உண்டு
இருந்தும் நான் அனாதை என்ற - எண்ணமும் உண்டு

நல்ல வாழ்க்கையிலே புகுந்தாள்
மாமன் மனைவி என்ற வடிவிலே
சாணியள்ளும் வேலை அங்கே
இன்று நான் அசை போடும் அழியாத நினைவுகளாய்

இந் நினைவு என்னை வாட்டியது
படித்துயர்ந்தேன் - ஒருவரின் அருட்கொடையால் வளர்ந்தேன்,
மாமன் மனைவி மூக்குடைந்தது கூட
அழியா நினைவுதான்

No comments:

Post a Comment