உன்னை நினைத்து என்னை மறந்தேன் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
உன்னை நினைத்து என்னை மறந்தேன்!
காதலில் நான் உருகினேன்!
மலரே உன்னை நினைக்க
நாவில் தேனாறு பாயுதடி,
கவிதை மழை கொட்டுதடி,
நித்தம் நான் நெல் சோறு சாப்பிடையில்,
உன் கண்மணிகளை காண்கின்றேன்,
காதோரம் தொங்கும் மணிகள்
என்னை ஒளி வீசி அழைக்குடி,
நீ பாவாடை தாவணி அணிந்து வருகையில்,
அந்த வானவில்லும் கண் சிமிட்டுதடி,
புடவைக் கட்டி வரும் மரிக்கொழுந்தே,
மாமன் மனசும் மருகுதடி,
நீ கருவைக் காட்டில் வருகையில்
கருவைக் காடும் சிவக்குதடி,
மாமன் நான் உன்னை நினைக்கையில்
மரகதமாய் ஒளிர்கிறேனடி!
நித்தம் நித்தம் உன்னை நினைத்தே,
தூக்கம் அதனைக் கலைந்தேன்,
என் வேலைகளை நான் செய்ய மறந்தேன் ,
உன்னால் மெய்மறந்தேன்,
உள்ளம் உருகுதடி,
உன்னை நினைக்கையில்
எல்லாம் மறக்குதடி!
உன்னை மட்டும் என் மனம் சுற்றுதடி!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
உன்னை நினைத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment