Wednesday, 22 November 2017

தேனாறு

தேனாறு _ 5
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கண்ணம்மா உன் பூவிழி என்னை அழைத்தது,
செல்லம்மா உன் கனிஇதழோ மினுமினுத்தது,
பொன்னம்மா உன் கொடியிடை இடுப்பும்
என்னை அணைத்தது - தேன்மொழி
உன்னை நினைக்கையில்  தேனாறாய்
நாவினில் பாயுது,
என் மிருகமும் என்னை அறியாமல்
விழித்தது,
கட்டுக்குள் இருக்கையில்
உன்மெல்லிடை என்னை கிரங்கடித்தது,
கண்கள் கவி பாடுது,
கவிஞன் என்மனம் கவிஎழுத
உன்னை நினைக்க,
காதல் கவிதை படைக்க தூண்டுகிறது.
காவியமாய் படைத்திட
நிலாச்சோறும் என்னை அழைக்கிறது.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
                                    அன்புடன்
                விருத்தாசலம் இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment