Wednesday, 22 November 2017

பன்முகத் தன்மை விரித்தத் தமிழ் பறவை

பன்முகத் தன்மை விரித்தத் தமிழ் பறவை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கணினி, தொலைபேசி, தந்தியும்
இணையமும் கண்டறியாக்காலம்,
தபால்நிலையம் தோன்றாக்காலம்
தகவல் பரிமாற்றம் என்னவென்றக்காலம்

தூதுச்செல்ல தூதுவன் இருந்தும்
நாட்கள் பல கடந்திடுவதால்
சென்ற செய்தியில் பிழையும் நேரும்.
விரைந்தும் சென்றிடும் தூதுவனாய்,
வெண்மை நிறத்து சமாதானப்புறாவாய்,

உலகில் எவரும் கண்டதில்லை,
தமிழன் விரைந்துச் செய்திகளை அனுப்பி வைத்தான்,
தகவல் பரிமாற்றத்தை புறாக்களின் மூலம் கண்டிருந்தான்.

பல போர்களை நிறுத்திய உயிரடா,
வெண்மையே அதன் தூய்மையடா!
வீட்டில் காட்டில் வளருமே,
மாடத்தில் கூட அழகாய் அமருமே,

அலகில் ஆலிவ்இலை இருந்திட்டால்
சமாதானத்தின் சின்னம் அது,
கைப்பேசி இப்பொழுது காதல்வளர்க்கிறது,
புறாவோ அப்பொழுதே காதல்வளர்த்தது.

கொஞ்சிப்பேசிடும் அழகென்ன!
பலகிலோமீட்டர் பறந்தே சாதனை படைத்திடும்,
பன்முகத் திறமையின் தமிழ்ப்பறவை,
நம் பறவைக்கு ஏது ஈடுஇணை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
                               அன்புடன்
                       இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment