கிராமத்து சமையல்
- - - - - - - - - - - - - - - - - -
கோழிக்கறி வாசம்
எங்க அத்த வீட்டுல வீசும்,
கொத்தமல்லி, கருவேப்பிலை
வாடையும் அங்கே தூக்கும்.
பூண்டு, மிளகு, இஞ்சி
அம்மியில் அரைத்த சாந்து
கலந்து குழம்பு வச்சிப்புட்டா
அத்தை மக விருந்து வச்சா
பாசமான வாசம் அது.
புள்ள நீயும் பெத்துப்புட்டா
ஆத்தா மருந்துக் குழம்பு வச்சிடுவா,
ஊருப்புள்ளா விசிடுகையில்
பொம்பலைங்க வந்திடுவாங்க
மூக்குரிய சாப்பிடுவாங்க,
காட்டுக்கீரை, கரிசிலாங்கண்ணி
கடுகு போட்டு
நல்லெண்ணெயில் தாலிச்சிக்
குடுத்துப் புட்டா அத்த மக,
ருசியோட தனி ரகம்
இரும்புச் சத்தும் தாதுச் சத்தும்
மாமனுக்கு கிடைத்தது அங்கே.
கத்தரிக்கா, பூண்டு போட்ட
நேத்து வச்ச மீன் குழம்பு
தானாய் சுண்டி இழுத்திடுமே,
ஒருக் கட்டு கட்டிடலாம்.
பாய்ப் போட்டு படுத்திடலாம்.
வேட்டிக் கட்டிய மாமன் இங்கே
ருசியெடுத்து அலையுறேன்,
நகரத்துல வாழுறேன்,
கிராமத்து சமையலுக்கு ஏக்கமடி,
தாவணி போட்ட மாமன் மகளே
மாமன நீயும் கட்டிக்கிட்டா
நல்லா ருசிப் பார்த்திடுவேன்,
முருங்கைக் கீரை கூட்டு வச்சா,
மாமனுக்கு முறுக்கு ஏறும்,
வாழத்தண்டு பொறியல் வச்சா
மாமன் வாலிபம் ஏறிடுமே,
கோவக்காய் கூட்டு வச்சா
கோபம் தலைக்கு ஏறுமடி
தண்டுக்கீரை கடஞ்சிக் கொடுத்தா
உச்சிக் குளிருமடி
சூடுக்கூட தணியுமடி
நகரத்து வாழ்க்கையிங்கே
வெறுத்துத்தான் போனதடி
நீ வைக்கும் கருவாட்டுக்குழம்புக்கு
மாமன் நாக்கு ஏங்குதடி,
சத்து பத்து இல்லாம
மாமன் விடுதியில் சாப்பிடுறேன்.
நாக்குக் கூட செத்துப் போச்சு
உன் சமையலுக்கு மனம் ஏங்குதடி.
கிராமத்து சமையலு
கிராமம் வாசம் வீசிடும்
நகரத்து சமையல சாப்பிடயில
நாசமாத்தான் போகனுமடி,
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment