நிலாச்சோறு
___________________________________
நாற்றம்அது துர்நாற்றம்,
பாதாள சாக்கடலில்
இறங்கி வேலைப்பார்த்தால்
தான் நாற்றம்போகும்,
அவன் ஒருநாள்
விடுப்பு எடுத்தால்
ஊரும் நாறிடுமே!
அவனுக்குஎன்று இந்நிலைமாறுமோ!
----------------------------------
துப்புரவு செய்கிறான்,
நாம்உபத்திரம் செய்கிறோம்,
அவனது வேலை
நமக்கது வேடிக்கை.
அவனின் ஏழ்மையால்
மலத்தை அள்ளுகிறான்,
அரசின் வேடிக்கையால்
இந்தவேலையே அவனின்வாடிக்கை
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment