Tuesday, 28 November 2017

புரிதலின்மை தரும் பிரிவுகள் - -

புரிதலின்மை தரும் பிரிவுகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்பு நண்பா  ......
சாதி பார்க்கவில்லை
மதமும் பார்க்கவில்லை
தொழில் ஒன்று தான்
குணத்தால் இணைந்தோம்

உணர்வுகளை மதித்ததாலே
சாதிகளை மறந்தோம்
உள்ளத்தால் இணைந்ததாலே
மதங்களை கடந்தோம்

யாரோ விட்ட ஏவுகணை
நல்ல நட்பை பிளந்தது
சாதி பெயரால்
செய்தாய் துரோகம்
என்னை நசுக்கிட நீ எடுத்த ஆயுதம் அது

உன்னால் பலரை எதிர்த்து நின்றேன்
சம பலத்தால் வெற்றியும் கண்டேன்
உன் புரிதலின்மையே
நம் நட்புக்கு எதிரியானது

உன் நட்புக்காக
பழைய நட்புக்களை உதறினேன்
உன் பிரிவால்
மீண்டும் பழைய நட்புக்கள் துளிர்ந்தது

புரியாமல் நீ முகநூலில் கருத்திட்டாய்
அதனால் உன்னிடம் விலகியிருந்தேன்
உன் செயல் தொடர்கிறது - உன்னை
நல்லவனாக காட்ட முயல்கிறாய்

நான் யாரென்று உலகம் அறியும்
நான் உன் நட்புக்களை
காவு வாங்கினேன் என்கிறாய்
புரியாமல் பிதற்றுகிறாய்,
ஆராய்ந்துப் பார், உண்மை தெரியும்

பிரிவு என்பது
என்னுடன் பிறந்தது
அதனால்தானோ என்னவோ
அன்பை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றேன்

உன் பிரிவு என்னை ஒன்றும் செய்திடாது
உனக்கு பெரும் இழப்பைத் தரும்
உன் செயல்களால்
உன்னை வெறுத்திடமாட்டேன்
என்றும் நட்பை நேசிப்பேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment