Wednesday, 22 November 2017

காய்ந்து உதிர்கின்ற இலைகளாய் வாழ்வின

காய்ந்து உதிர்கின்ற இலைகளாய்
வாழ்வின் -----------------------------
_______________________
சருகுகள் புன்னகைப்பதில்லை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காய்ந்து உதிர்கின்ற இலைகளாய் வாழ்வின் பிரிவுகள் தொடர்ந்தது,
பள்ளிப்பருவம் முடிவுஅது
தோழர்களையும் தோழிகளையும்
பிரிய மனமில்லை,
துள்ளித்திரிந்த காலங்களோ
நினைவலையில்.
அன்பான சண்டைகள்,
சில நேரமே நீடிக்கும்
இந்த பிரிவோ என்றும் நீடிக்கும்,
உதிர்ந்த இலைகள் ஒட்டுவதில்லை,
கடந்த காலங்கள் திரும்புவதும் இல்லை,
திடீர் என சந்திக்கையில்
பழைய நட்பில் பாதியும் இராது,
தாய், தந்தை பிரிவினிலே,
வாழ்க்கையின் அடிமட்டமே பிரியுமே!
பாசத்தை பார்க்கவும் முடியாது,
வேண்டாம் என்ற போதும்
அறிவை புகட்டிய தந்தையின்
ஆலோசனையினை கேட்கவும் முடியாது,
அதிக பாசம் வைத்தவர்
நிலையாய் இருக்கவும் முடியாது.
இருந்தாலும் அன்று அவரை
நாம் கவனிப்பதும் இல்லை,
பிரிந்த பிறகு நினைத்தழுவதேன்!
பிரிவில் கூட சுகம் அறிந்தாலும்
மரத்தை விட்டு பிரிந்த
சருகுகள் புன்னகைப்பதில்லை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment