என்னை மறந்தேன் , நிலாமுற்றத்தில்
உன்னை கண்ட நாள்முதல்
உன்மீது கொண்ட காதலால்
நான் என்னை மறந்தேன் ,
துள்ளி திரிந்தநான் பைங்கிளியே
உன்னால் என்னை மறந்தேன் ,
உண்டு பலநாள் ஆகியது,
சாப்பிட மறந்தேன் ,
ஊர்சுற்றுவதை நான் மறந்தேன் ,
தாயுண்டு, தந்தையுண்டு,
உற்றார் உறவினரும் உண்டு
எல்லாம் மறந்தேன் ,
உன்னையும் பாதி நான்மறந்தேன் ,
உன்கண்ணால் என்னை நானே மறந்தேன் ,
தினசரியும் படிக்க மறந்தேன்.
என்கனவுகளை நான் மறந்தேன் ,
என்தொழிலையும் மறந்தே விட்டேன்,
இணையத்திலே மூழ்கியும் இருப்பேன்,
இப்பொழுது அதனையும் மறந்தேவிட்டேன்,
எனக்குப் பிடித்த ஊஞ்சலடி,
நீயும் ஆட வருவாய்என
நானும் ஆடமறந்துவிட்டேன்,
உன்னை இசையாய் மீட்டெடுப்பேன்,
யாழ் போலத்தான் இசைத்திடுவேன்,
உன்னை பார்த்த பின்பு
இசைக்க மறந்தேன் ,
ஆனால் உன்னையே
என்னாளும் சுவாசிக்க மறக்கமாட்டேன்.
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment