நிர்க்கதியாகும் மனிதம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மனிதா எங்கே உன் மனிதம்
அடகுவைத்தாயா,
மதுவுக்கு மயங்கிய சிறு மூளையே
எங்கே உன் மனிதம்
மாதுவுக்கு அடங்கிய கட்டிளங்காளையே
எங்கே உன் மனிதம்
குழந்தையிடமும் சிரிக்காத மனமே
எங்கே உன் மனிதம்,
மனிதத் தன்மை மாறியதோ - மீண்டும்
உன் மனம் குரங்காய் ஆனதோ,
மிருக மனம் படைத்தவனே
எங்கேச் சென்றது உன் மனிதம்
தண்ணீர் இன்றி தவிக்கின்றான் தமிழன்
கைக் கொட்டி கொண்டாடும் கன்னடன்
வேடிக்கையும் பார்க்கிறான் தெலுங்கன்
மொழி வெறி தழைத்தோங்க
மனிதா எங்கே உன் மனிதம்,
பிச்சையெடுக்கும் கூட்டமும் பெருகியதே,
ஆடையின்றி கூட்டம் இங்கே திரியுதே!
கள்ளம் கபடமில்லா குழந்தை
திருவோடு ஏந்தி இங்கே அலையுதே
அரசே எங்கேச் சென்றது உன் மனிதம்
அய்யகோ! நிர்கதியாகுதே மனிதம்!
- - - - - - - - - - - - - .----------- ......
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
நிர்கதியாகும் மனிதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment