Wednesday, 22 November 2017

ஜல்லிக் கட்டு

ஜல்லிக்கட்டு
--------------------
இதுஅலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு,
விலங்காத பயலுகளே தள்ளி நில்லு,
வீரம் உள்ள காளை யாரு,
காளைய நீயும் அடக்கிப் பாரு,

மாமன் மகள் வந்திருக்கா,
அத்தை மகள் வந்திருக்கா,
வீரம் விளைஞ்ச மண்ணு இது
காளையை அடக்கி வீரத்த காட்டு,

ஊரு சனம் வந்திருக்க,
நாட்டாமை எல்லாம் வேடிக்கப் பார்க்க,
மீசையுள்ள ஆம்புளையாய் நீ
களத்தில் இறங்கி போராடு,

போரென்று வந்துப்புட்டா,
தமிழனுக்கு ஏது தலைக் குனிவு,
வீரம் என்று வந்துப்புட்டா,
தமிழன் தலை நிமிரும் பாரு,

ஜல்லிக்கட்டுல நீயும் மல்லுக்கட்டு,
காளை அது,
நீயும் போலி காளை இல்லையென்று திமிலப் புடிச்சி அடக்கிக் காட்டு,
வீரமுள்ள தமிழன் என்று
உலகிலே உரக்கச் சொல்லு,

வீணாய் போன வீனர்களின்,
வாய்ச் சவடாலை புறந்தள்ளு,
நம்ம போட்ட சட்டம் அது,
நம்மை தடுப்பது யாரு அங்கே,

சதி நடக்குது பாருடா,
மகா யுத்தம் நடக்குது பாருடா,
நாட்டு மாட அழிக்க
கூத்தும் இங்கே நடக்குதுவும் பாருடா,

சிந்தி ஜெர்சி மாடெல்லாம்
வருடக் கணக்கில் பெருகுது,
வெளிநாட்டு கலப்பினம் அது தெரியாம
மக்கள் வாங்குது,
வளர்ந்த நாடு சதி செய்யுது,
நாட்டு மாட்டை அழிக்க வேலை பார்க்குது,

சதியெல்லாம் முறியடிச்சி,
நாட்டு மாட்டை காப்பாத்தனும்,
ஜல்லிக்கட்ட மீண்டும் நடத்த
காளையாய் நீயும் புறப்படு,
தமிழா நீங்க எல்லாம் ஒன்றுப்பட்டா ,
ஜல்லிக் கட்டு நடக்கும் இங்கே,

வீரமான காளையாய் நீ புறப்படு
எதிரில் வரும் கயவர்களை போட்டுத்தள்ளு,
ஜல்லிக்கட்டு காளையாய் நீபுறப்படு,
எதிர் சூழ்ச்சிகளை குத்தித் தள்ளு,

யுத்தம் நடக்குது பாருங்கடா,
சமயம் பார்த்து பேசும் அரசியல் வாதிய
ஓட விடுங்கடா,
போலியாய் நடிக்கும் நடிகரை
தூக்கி எங்கோ போடுங்கடா,

நடிகைக்கு கோவில் கட்டுன ஊருல
காளைக்கும் கோவில்  கட்டுன
ஊரு எங்க ஊருடா,
மானமுள்ள தமிழா நீ
எழுச்சி கொண்டு வாடா,
தடையெல்லாம் நமக்கு ஏது ,
நீ புகுந்து விளையாடு ஜல்லிக்கட்டு,

துட்டுக்காக ஏங்குறவன்
மட்டைப்பந்தும் இங்கே விளையாடுறான்,
வீரத்துக்காக ஏங்கும் நாம
ஜல்லிக்கட்டும் விளையாடலாம்,.
------------------------------------------------------
                              அன்புடன்
                      இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment