அழகின் சிரிப்பில் நீங்கள்?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ - - - - -
சல சல என்று ஓடிய நீர்நிலையில்
மழலைச் சத்தங்கள் நிறைந்திடும்
தண்ணீர் இல்லாத ஓடைகள்
ஊற்றே இல்லாத கிணறுகள்
மழலையின் கொஞ்சல் அழகெங்கே?
கட கட என்று கட்டை வண்டிகள் ஓடும்
மாட்டு வண்டிகள் மூச்சிறைக்க ஓடும்
குதிரை வண்டிகள் கூவமாய் ஓடும்
கழுதையும் பொதி சுமந்து நடக்கும்
சுற்றிலும் பசுமை காடுகள் தெரியும்
இவையெல்லாம் எங்கே சென்றது,
மண் சாலை நாற்கர சாலையானது
சாலைகள் புழுதியானது
காற்று மாசானது
கடலும் நாசமானது
வானமும் புகையானது.
மும்மாரி பொழிந்தது.
இயற்கை சிரித்தது,
காலம் சரிந்தது,
மூன்று வருடம் கடந்தும்
இயற்கை சிரிக்கவில்லை
பூமி வறண்டது?
உயிர்கள் அழுதது.
செயற்கை மட்டுமே சிரிக்கிறது
இயற்கையோ அழுகிறது,
தன் அழகை காணவில்லையே என்று.
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருதை வீரா