Wednesday, 22 November 2017

வாழும் கலைகள்

வாழும் கலைகள்
------------------------------
தமிழன் வாழும் போதே செய்து வைத்தான்,
அவன் இறந்த போதும் பேச வைத்தான்,
வாழ்க்கை இதுதான் என்று
சொல்லாமல் சொல்லி வைத்தான்.

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும்
செதுக்கி வைத்தான்,
புதுமண தம்பதியர்க்கு
காமக்கலையை கற்றுக்கொடுத்தான்,
விஞ்ஞானம் வளராக் காலத்தில்
மெய்ஞானத்தால் வரையறுத்தான்,
பூமியின் மத்தியப்புள்ளி சிதம்பரமாம்,
அதையும் மதியால் அறிந்து
ஆன்மிகக் கலைக்கூடம் அமைத்திட்டான்!

உலக மக்கள் வியக்கின்றனர்,
தஞ்சை நிழல் சாராக்கோபுரம்,
தரை ஊன்றா கற்தூண்கள்,
தமிழன்அவன் சாகசத்தின் அடையாளம்,

கண்காட்சிக்கு மாமல்லப்புரம்,
கடல்அழகு கொஞ்ச இளைப்பாறலாம்,
சித்தன்னவாசல் ஓவியத்திற்கு
ஈடு இணை உண்டோ!

பார்த்து ரசிக்க இசைக்கலை,
கண்டு ரசிக்க ஆடற்கலை,
கண்கள் வியக்க சிற்பக்கலை,
கண்கள் மனதுடன்
ஒத்துப்போக ஓவியக்கலை,
உணர்ச்சிப் பெருக்கெடுக்கும் உன்னதக் கலையாம் கட்டிடக்கலை - இந்த
பஞ்சக்கலைகளும் உலகெங்கும்
வாழும் கலைகளே!

கலைகளை போற்றுவோம்,
வாழும் கலைகளை காப்போம்,
தமிழகத்தின் அரிய கருவூலங்களாய்
அலங்கரிப்போம்,
பல கலைகளை இழந்தோம்,
இருக்கும் கலைகளை மீட்டெடுப்போம்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment