எருக்கத்தம்புலியூர் ராஜேந்திரப் பட்டினம் ஆனது எப்படி:
சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வரும் நீலமலர்க்கன்னி உடனுரை நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ள ஊர் ராஜேந்திரப்பட்டினம். எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சிவன், ஆன்மாக்கள் தன்னை வழிப்பட்டு உயர்வு பெற வேண்டும் என்ற பெருங்கருணையால் சிவலிங்கம் முதலான திருவுருவங்கொண்டு எழுந்தருளியிருக்கும் தலங்கள் பலவற்றுள் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய தேவார மூவர் அருளிய திருப்பதிகங்களை பெற்ற 22 திருத்தலங்களில் ஒன்றாய் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய மூன்றாலும் சிறப்புற்றதாய் விலங்குவது ராஜேந்திரப்பட்டினம் ஆகும்.
எருக்கத்தம்புலியூர் என்ற ராஜேந்தரப்பட்டினம்:
ராஜேந்திரப்பட்டினம் விருத்தாசலம்&ஜெயங்கொண்டம் சாலையில் அமைந்துள்ள ஒரு அழகான சிற்றூராகும். ராஜேந்திரப்பட்டினம் வெள்ளை எருக்கு அதிகம் விளைந்திருந்ததாலும், கோவிலின் தல விருட்சமாகய் கொண்டதாலும், அந்த மரத்தின் பெயரால் எருக்கத்தம்புலியூர் என அழைக்கப்பட்ட ஊராகும்.
ராஜராஜசோழன் தனக்கு மகப்பேறு வேண்டி வழிப்பட்டு ராஜேந்திரசோழன் என்ற மன்னனை பெற்றெடுத்ததால் இந்த ஊருக்கு ராஜேந்திரப்பட்டினம் என்ற பெயர் உண்டானதாக செவி வழி செய்திகள் தெரிவிக்கின்றன.
வியாக்ரபாத முனிவரால்(புலிக்கால் முனிவர்) பூஜிக்கப்பட்ட சிதம்பரம் என்ற பெரும்பற்றபுலியூர், பெரும்புலியூர், திருப்பாதிரிபுலியூர், ஓமாம்புலியூர், திருஎருக்கத்தம்புலியூர் ஆகிய புலியூர் என்ற 5 ஊர்களில் உள்ள கடவுள்களை வழிப்பட்டு¢ வந்துள்ளார். நீலகண்டேவரரை திருக்குமாரசுவாமி என்றும் திருநீலமலர்கன்னியம்மையை அம்பிகை வீறார் முல்லையம்மை என்றும் மறுபெயரால் அழைக்கப்படுகிறார்.
தேவாரத்திற்கு இசையமைத்த இசை மேதை:
63 நயன்மார்களில் ஒருவரும், திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்து அவர் இயற்றிய தேவாரத் திருப்பதிகங்களுக்கு உடனிருந்து யாழ் வாசிக்கும் தொண்டினை செய்தருளிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்த சிறப்பைப்பெற்றது இந்த ஊர். தேவாரத்திற்கு இசை அமைத்த இசைமேதை என்பதால், அவர் பெயரால் சிவன் திருநீலகண்டேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
கயிலாயத்தில் சிவபெருமான் வேதகாமங்களின் உட்பொருளை உபதேசித்த போது அதனை பாராமுகமாக கேட்ட குற்றத்திற்காக உமையம்மையை மீனவர் குல பெண்ணாக பிறக்குமாறு சிவன் சாபமளித்தார். முருகன் சினந்து தன் தாயை சபித்ததற்கு காரணமாக இருந்த அந்த நூல்களை கடலில் வீசினார். அந்த குற்றத்திற்காக உருத்திர சன்மாராய்(ஊமையாய்) பிறந்த முருகன், இந்த தலத்தை அடைந்து சிவபெருமானை பூஜித்து ஊமை நீங்கப்பெற்றார், என்றும் அதனால் இந்த கோவிலை குமரேசபுரம் சுவாமி எனவும், குமாரசுவாமி எனவும் அழைக்கப்பட்டதாக தல புராணம் தெரிவிக்கின்றது.
விருத்தாசலம் வந்து பழமலைநாதரை வணங்கிய தேவகணங்கள், அதிகமான வரங்களும், எளிதில் முக்தியடையும், சிவதலம் எது என்று கேட்டனர். அப்போது பழமலைநாதர் எருக்கத்தம்புலியூர் என்று கூற அந்த தேவகணங்கள், எல்லாம் ராஜேந்திரப்பட்டினம் என்ற எருக்கத்தம்புலியூர் கிராமத்திற்கு வந்து சிவலிங்கத்தை பூஜித்து, முக்தி அடைந்ததால், கணேசுரம் என்ற பெய-ரும் இந்த கோவிலுக்கு உண்டாயிற்று,
ஸ்கந்த புஸ்கரணி தீர்த்தம்:
உச்சிணி பட்டணத்து ராஜா சுவேதன் என்பவர் முன்செய்த கருமவினையால் வெண்குஷ்டம் ஏற்பட்டு அதனால் சிவனை இரவும், பகலும் சிந்தித்து வணங்கி, வந்த போது அவர் கனவில் தோன்றி திருஎருக்கத்தம்புலியூர் தலத்திற்கு சென்று தீர்த்தத்தில் மூழ்கி வழிப்பட்டு வந்தால் நோய் தீரும் என கூறியதால் அவ்வாறு செய்த அவருக்கு நோய் நீங்கி நலமானதாக கூறப்படுகிறது.அதனால் இந்த தீர்த்தத்திற்கு ஸ்கந்த புஸ்கரணி தீர்த்தம் என்றும், இதனால் சிவனுக்கு சுவேதார்க்வனேஷ்வர் என்றும் பெயர் உண்டாயிற்று. இந்த தலம் வெண்குஷ்டம் நீங்கிய தலம் என்று தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. எருக்கத்தம்புரியூரில் பாவங்கள் செய்தால் அவனை கெடுத்து கொன்றுவிடுமாம். மோட்சமும் கிடைக்காதாம்.. மற்ற ஊர்களில் செய்த பாவமானது இந்த எருக்கத்தம்புலியூருக்கு வந்து இறைவனை தரிசினம் செய்தால் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேறு எந்த ஊரில் உள்ள ஸ்தலங்களை வழிப்பட்டாலும் பாவங்கள் தீராது என்பது ஐதீகம்.
உடையார்பாளையத்து ஜமின் வந்து தேர் இழுத்தால்தான் தான் இந்த கோவில் தேர் ஓடும். ஆனால் கடந்த சில வருடங்களாக ஜமின் வாரிசுகள் வராததால் பக்தர்களே தேரினை இழுத்துவிடுகின்றனர். விளந்தை செங்குந்தர் இன மக்கள் இந்த கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்தில் வந்து கொடியேற்றப்பட்டவுடன், இந்த சிவனை வணங்கி சென்ற பிறகுதான் தங்களது நெசுவு தொழிலை ஆரம்பிப்பார்கள் என கூறப்படுகிறது. அவ்வாறு நெசவு தொழிலை ஆரம்பித்தால் தொழில் நன்கு விருத்தியடைந்து வியாபாரம் பெருகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். பங்குனி 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் இந்த சிவனின் மீது சூரிய உதயத்தின் போது சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தை சில நொடிகள் தரிசினம் செய்வதை காணலாம் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
வரலாற்று ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கூறும் போது கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊரில் உள்ள விவசாயி ஒருவரது வயலில் குழி தோண்டிய போது கலைநயமான புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த புத்தர் சிலையில் புத்தர் மட விகாரி மகேந்திரவர்மன் என பொறிக்கப்பட்டிருந்தது. இதனை வைத்து பார்க்கும் போது பல்லவர் காலத்திலும் இந்த ஊர் புத்த மதத்தை தழுவி வந்துள்ளதும் வரலாற்று ஆய்வில் தெரிய வருகிறது. ஆனால் இந்த புத்தர் சிலை திடீர் என அங்கிருந்து காணமல் போய்விட்டது. இந்த ஊர் பட்டிணம் என அழைக்கபடுவதால் மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கி வந்துள்ளதாக வராற்று ஆய்வாளர் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தெரிவிக்கின்றார். மேலும் அவர் கூறும் போது இந்த ஊரில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கி.பி. 10&13ம் நூற்றாண்டு வரை இடைக்கால மக்கள் வாழ்ந்த தடயங்கள் கிடைத்துள்ளது.