Wednesday, 22 November 2017

விவசாயியின் கவலை

விவசாயியின் கவலை,

பெய்த மழையை காரணம் காட்டி
மாட்ட புடிச்சி ஏருழுது,
கண்மாயில நீர் இறைச்சி
நாத்த நானும் நட்டுப்புட்டேன் கண்ணம்மா,
வசமா நானும் சிக்கிப்புட்டேன் செல்லம்மா,
என் கண்ணம்மா, .....

புள்ளைங்களும் படித்திருக்கும்,
வாட்டமாத்தான் வளர்ந்திருக்கும்,
ஏடெல்லாம் தூங்குதடி கண்ணம்மா,
புள்ளைங்க படிக்கும்  பணத்தை எடுத்து
நானும் செய்தேனே விவசாயமே....

ஆத்துலதான் தண்ணிய கானோம்,
வானத்துல மழை மேகத்த கானோம்.
நிலத்துலதான் பயிரையும் கானோம்,
என் முகத்துல தான் மகிழ்ச்சியை கானோம்,
கண்ணம்மா, நான் என்ன செய்வதம்மா......

உண்ணக் கூட உணவும் இல்லே,
உடுத்தக் கூட உடையும் இல்லே,
எலி தானே உணவும் ஆச்சி
நண்டுக் கூட பொறியல் ஆச்சி,
இதையேத் தான் உண்டுக்கிட்டு
காலத்தத்தான் கடத்திக்கிட்டு
கெடக்குறோமே கண்ணம்மா - என்
செல்லம்மா,

மாரியாத்தா கருணைக் காட்ட
பூ மிதிக்க நான் நேந்துக்கிட்டேன்,
மாரிக் கூட பொழியவில்லை,
என் தூவானமும் விடியவில்லை
என்று தான் விடியுமோ தெரியவில்லை
கண்ணம்மா என் செல்லம்மா,,,,,,

பறந்து விரிந்த வானம் இருக்கு,
தண்ணியெல்லாம் நிறைய இருக்கு,
நீலமா படர்ந்திருக்கு,
கரையைக் கூட காணுமே கடலம்மா
என் செல்லம்மா,,,,,,,,
ஆனாலும் மாரிக்கூட
உன்னிடத்தில் பொழிகிறதே,
பயன் என்னம்மா, கடலம்மா..,,,,.

என்று தான் விடியுமோ,
வானம் மழை பொய்யுமோ,
பயிரெல்லாம் வளருமோ,
நாடு நலம் பெறுமோ,
சொல்லம்மா, மாரியம்மா,,,

நீண்டு ஓடும் நதியிருக்கு,
ஏரி, குளமும் இருக்கு,
எல்லாம் வறண்டு போனதடி
செவ்வானமும் கருத்ததடி,
தரணியெல்லாம் காய்ந்ததடி
கண்ணம்மா என் செல்லம்மா,,,,,

வாங்குன கடனெல்லாம்,
வட்டி குட்டிப் போட்டு
குட்டியும் வட்டி போட்டுடுச்சி - கடன்
குடுத்தவனெல்லாம்
நெறிக்குறானே,
ஊட்டியையும் இறுக்குறானே,
மானமும் போனதே,
இனி வாழ்ந்து என்ன செய்ய போறேன்,
என் கண்ணம்மா, என் செல்லம்மா.....
.____________
                    கவலையுடன்
    விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
    













No comments:

Post a Comment