காதல் செவ்வாய்
- - - - - - - - - - - - - -
எப்படிச் சொல்வேனடி
- - - - - - - - - - - - - - - -
எப்படிச்சொல்வேனடி உன்னில்
விழுந்தேனடி,
மையிட்ட கண்ணால் என்னைவீழ்த்தினாய்,
செங்கதிரின் சிவந்த உதடுகளாய்
மடக்கினாய்,
கொடியிடை இடுப்பால் என்னை
மாய்த்துவிட்டாய்!
எப்படிச்சொல்வேனடி .
உன்னை இங்கு நினைக்கையில்
கவிதையும் எழுதுகிறேன் - நானடி
என்செல்லமே செல்லம்,
கல்லூரி போகையில,
நட்சத்திரக் கூட்டமும் மிளிருதடி,
பட்டாம்பூச்சிகளும் சுற்றி வந்து
என்னைக்கொஞ்சுதடி,
உன்னை போல கண்ணம்மா,
எங்கும் இல்லை பொன்னம்மா,
வாய்க்கால்வரப்பு சண்டையெல்லாம்
நடக்குது,
எனக்குள் இப்போது காதல்
துளிர்விட்டு துடிக்குதடி -என்இதயம்,
எப்படிஉன்னிடம் சொல்வேனோ,
இப்படியே காலம் கடந்திட்டால்
காதல் நோயும் வந்திடும்.
கிட்டே வந்தால் முறைக்கிறாய்,
பேசநினைத்தால் மழுப்புகிறாய்,
பின்னாள் வந்தால் முன்னால்
நீசிரிக்கின்றாய்,
அப்படியே முன்வந்து நின்றிட்டால்.
வெட்கப்பட்டு ஓடி மறைகிறாய்,
மறைந்து நானும் பார்த்துவிட்டால்
மர்மமாய் நீயும் பதுங்கினாய்,
எப்படி சொல்வேனடி,
செவ்வாயில் மலர்ந்த என்காதலியே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதலுடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment