Wednesday, 22 November 2017

என் காதல் தாய்

என் காதல் தாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
என் கண்களால் தான் கவர்ந்தாய்,
என நினைத்தேன்,
காந்தமாய் ஈர்த்துக்கொண்டாய்!
நுகர்ந்ததும் உன் மனம் என்னை கிரங்கடித்தது,
அறியா பருவம் என்பதை இன்றுணர்ந்தேன்! அறிந்ததும் காதல் கொண்டேன்
உன் மேல் அதை மட்டும் என்னாள் இன்று வரை உணர முடியவில்லையே?
உன்னை முழுதும் படித்துணரத்தான் நினைத்தேன்.
உன் தேனை பருகத் தான் நினைத்தேன், அறுவகை சுவையிலும் பெரிதல்லவா? உன்னை வாசிக்கும் சுவை.
ஆனால் உன்னை புரட்டிப் பார்க்க கூட நேரமின்மையால் வாடித் தான் போகிறேன், மழையை கானா பயிரை போல, தாயில்லா குழந்தையாக ?
என்றும் உன்னை மட்டுமே சுவாசிக்கும், உன்னையே வாசிக்கும் வரம் வேண்டும், எனக்கு.
இது என்னை மட்டும் இன்றி, தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொருவரின் உயிர் மூச்சி,
ஆம் அது தான் என் தாய் மொழி தமிழ் மொழி,
என் காதல் தாய்

No comments:

Post a Comment