Wednesday, 22 November 2017

இது நம் உரிமை

இது நம் உரிமை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை
தட்டி எழுப்பியது யாரடா,
உரிமையை  தட்டிப்பறித்திட
சட்டம் இயற்றியது யாரடா,

பேச்சுரிமை, எழுத்துரிமை இங்கில்லையே,
எந்த சக்தி பறித்ததென்று தெறியலையே,
உலக உத்தமர் வாங்கி வந்த சுதந்திரம்
காற்றிலே பறக்குதடா தரித்திரம்,

தண்ணீர் கூட தர மறுக்கிறான்,
ஜல்லிக்கட்டு நடத்த மறுக்கிறான்,
நல்லத் திட்டங்களை தடுத்தி நிறுத்துகிறான்
நம் உரிமைகளை பறிக்கிறான்,

ஓட்டு மட்டும் கேட்க வருகிறான்,
கொள்ளையடித்தப் பணத்தை
கையிலே திணிக்கிறான்,
வாக்குரிமையை மட்டும் சுரண்டுறான்.

ஏழ்மை மக்கள் நம்பி ஏமாறுதே
அய்யோ என் மனமும் வேகுதே!
நம் உரிமையை நாம் கொண்டாடுவோம்,
உரிமையைப் பெற நாம் போராடுவோம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment