Wednesday, 22 November 2017

நீதானடி என் உசுரு

நீ தான்டி என் உசுரு
கண்ணே, கண்மணியே!
நான் கண்மூடி தூங்கையிலே
தாலாட்டு பாடுறியே மறிக்கொழுந்தே!

மல்லிகைப்பூ வாங்கி வந்த வேளையிலே,
உன்கூந்தலிலே வைத்து சூடையிலே
அருவியா கொட்டுதடி கவிமழையும்,
சந்தனமாய் மணக்குதடி உன்வாசமும்

பாண்டிநாட்டு பெண்ணாய் இருந்த போதிலும்
கரும்பு போல இனிக்குதடி உன்உதடும்,
தென்நாட்டு அம்மணியான போதிலும்
பலாசுளையாய் இனிக்குதடி உன்கவியும்

நீயின்றி நான் இல்லையடி
இன்று வெறும் நினைவாய் போச்சுதடி
என்றும் என் நினைவில் நீஇருக்க
உயிர் மூச்சும்  நிற்காமல் இயங்க
நீதானடி என்உசுரு அன்பே ஆருயிரே!

No comments:

Post a Comment