நீதி தேவதையே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நீதி தேவதையே நீதிகூற வா !
குற்றமற்றவன் சுதந்திரமாக அலைகிறான்,
குற்றம் சுமத்தியவன்,
வழக்காடி அலைகிறான்,
கண்கள் கட்டப்பட்டும்
உன்கண் திறந்ததே!
உன்பிள்ளைகள் நீதிபதிகளால்
உம்கண்கள் பணத்தால் திறக்கப்பட்டதே!
ஊழல்வாதியும் இங்கே பெருகிவிட்டனர்,
கொலையும், கொள்ளையும் நடக்குதே!
வழக்குப் பதிவும் நடக்குது!
வழக்கும் ஆண்டுக்கணக்காய் நடக்குது,
எட்டாக்கனியாய் தீர்ப்பு மட்டும் இருக்கிறது,
நீதித்தாயே பதிலும் சொல்லம்மா!
நாங்களும் உங்கள் பிள்ளைகளம்மா!
சமநீதி, நியாயம் வேண்டும்மா!
பணத்தைத்தவிர்த்து
தர்மத்தை நிலைநாட்டவாம்மா!
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
நீதி தேவதையே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment