Wednesday, 22 November 2017

வானவில்லின்

வானவில்லின் ஏழு நிறங்கள் கொண்டு
சப்தஸ்வரங்களாய் ஒலித்திடுவோம்,
ஏழு கண்டங்களையும் கடந்திடுவோம்
தமிழனாய் தலை நிமிர்ந்திடுவோம்!

ஈழத்தமிழனும் நம்தமிழன்
நேசக்கரம் நீட்டிடுவோம்,
போரையும் தடுத்து நிறுத்திடுவோம்,
தமிழ் கொடியை ஏற்றிடுவோம்!

சேரன் சோழன் பாண்டியன்
வளர்த்தெடுத்த தமிழடா,
முச்சங்கம் அமைத்து
செந்தமிழும் பைந்தமிழும்
சேர்ந்த செம்மொழி தமிழடா,

அகத்திய முனியும்
வள்ளுவனும் அளந்த தமிழ் மொழி,
இலக்கணம் கூட வழிமுறையாய்
படைத்திட்ட தொல்காப்பியர்
சுவைத்திட்ட மொழி,
பாரதியும், பாரதிதாசனும்
கவி முத்தெடுத்த மொழி எம் மொழி,
தமிழ் தாத்தா உ.வே.சா,
தமிழ் மாணிக்கம் மு.வ
ஊட்டிய மொழி என் மொழி
வானவில்லின் ஏழு நிறங்களாய்
இந்த எழுவரின் அணிகலன்
அணிந்த என் தமிழன்னையை
சுவாசிக்கிறேன், உயிர் மூச்சாய்
வணங்குகிறேன்,
            அன்புள்ள தமிழன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்,





No comments:

Post a Comment