முதுகுக்குப் பின்னால் நரிகள்
-----------------------------------------------
சிரிக்க சிரிக்க பேசிடும் மனிதா!
அவன் பல்லில் விஷம் தெரியுது, பாரடா!
முன்னே சிரிப்பான்,
பின்னால் விஷத்தைக் கக்குவான்,
பார்த்தே நீயும் பழகிக்கோ!
நல்ல நல்ல மனிதர்களே,
நீங்கள் மிகவும் நல்லவரோ,
பின்னால் தீங்கு வருகிறது!
உங்கள் முன்னால் இருப்பவர்களால்,
காலில் விழுந்து
குழியில் தள்ளும் உலகமடா!
அண்ணன் தம்பி பாசம் பத்து வருடம்
அதற்கு மேலே எல்லாம் வேஷம்,
அகத்திலே ஒன்று வைத்து
புறத்திலே ஒன்று பேசிடுவான்,
முகத்திலே சேற்றையும் வாரி பூசிடுவான்!
யாரை நம்பியும் நீ வாழ்ந்திட்டால்,
வாழ்க்கையில் எங்கே உயர்வது,
தன்னம்பிக்கையை நம்பி பாரு!
சிகரத்தை நீயும் தொட்டிடலாம்.
தந்திரம் செய்து ஊலையிடும் மனிதர்களே,
எழுந்தவரெல்லாம் வீழ்ந்திடுவார்,
வீழ்ந்தவரெல்லாம் எழுந்திடுவார்
முதுகுக்கு பின்னால் நரிகளெல்லாம்
மூக்குடைந்து போயிடுவார்.
---------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment