Wednesday, 22 November 2017

விதையோ

விதையோ!
மண்ணின் கொடையோ!
தாய் தந்தாய் வரம் வாங்கும் நிலமாய்!
பண்பான மனமாய்,
எங்களைப் பெற்றெடுத்த தெய்வங்களே,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
நிலைத்திடும் தாய் தந்தை உறவாய்
விதையாய் விதைத்தீர்கள்
பெயர் சொல்லும் பிள்ளைகளாய்
கற்பக விருட்சமாய்,
வாழ்க்கைதனை வாழ்ந்திடுவோம்,
ஏழைகள் வாழ்ந்திட உயிர்கொடுப்போம்,
ஏழைகளை சுரண்டினால்
உயிரை எடுக்கவும் அஞ்சமாட்டோம்,
இயற்கைதனை காத்திடுவோம்,
முடியாதவர்க்கு தோள் கொடுப்போம்
தவறுகளை தண்டித்திடுவோம்,
கல்விதனை பயின்றிடுவோம்
கல்லாதவர்க்கு கற்பித்திடுவோம்,
தடம் அதை பதித்திடுவோம்
முன் உதாரணமாய் வாழ்ந்திடுவோம்,
சமுகத்தை உயர்த்திட
சரிசமமாய் பங்கெடுப்போம்
பெற்றவர்கள் பெயர்தனைக் கூறிட
பாசமாய் உழைத்திடுவோம்,
உண்மையாய் உழைத்து
ஊதியத்தை பெற்றிடுவோம்,
உரிமையைப் பெற போராடுவோம்,
என்றும் விழித்திருப்போம்,
தமிழனாய் போராடுவோம்,
வறுமைதனை அகற்றிடுவோம்,
தமிழனாய் வாழ்ந்திடுவோம்.
உறுதியாய் கூறிடுவோம்
--------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்


No comments:

Post a Comment