Wednesday, 22 November 2017

ஒரு முறை புன்னகை கொடு

ஒரு முறை புன்னகைக் கொடு
- - - - - - - - - - - - - - - - - - - -
எங்கும் வறுமை,
எங்கும் பட்டினி,
எங்கும் சாவு,
ஈவு இரக்கம் அற்ற கடவுளே
இவர்களின் உள்ளக் குமுறல் கேட்கலையா!

பசுமை நிறைந்த இந்தியா
பாலைவனமாய் மிளிர்கிறது,
பைந்தமிழ் சோலை
கானகமாய் சுடர் விடுகிறது,

கையிலே திருவோடு ஏந்தியே
கூட்டம் ஒன்று அலைகிறது,
உடுக்க உடையின்றி
ஒரு கூட்டம் திரியுது,
கேட்பாரற்றுக் கிடக்குது
சாலையோரம் ஒருக் கூட்டம்,

முதியோர் விடுதிகள் பெருகுது,
சிறுவர் விடுதிகள் சிறகடிக்குது,
தொட்டில் குழந்தைகள் உயருது,
சிவப்பு விளக்கோ பளிச்சிடுது,

பாமரனும் உயரனும்,
ஆதரவற்றோரும் வளரனும்,
வாழ்க்கையில் உயரனும்
வெற்றிகள் பல பெற வேண்டும்,

இறைவா,
அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிட
கருணை காட்டிட
ஒரு முறை புன்னகைக் கொடு
வாழ்வில் ஒளி வீசிட
பந்தமாய் புன்னகைக் கொடு
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment