நீரில் நிழலாய் உன் முகம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - _
நீரில் நிழலாய் உன் முகம்
நெஞ்சில் நிலைத்திட்ட முகம்
ஆறாத காயத்தின் காதல்
நெஞ்சில் நிலைத்திட்ட வடு,
சாதியம் கடந்தே மலர்ந்தது
மனதால் மட்டுமே இணைந்தது,
என்றும் என்னில் பாதியவள்,
காதல் கொண்டேன் ரோசா மலரே,
பறிக்க ஆசைப்பட்டேன்
ரத்தம் சிந்தினேனடி,
துன்பத்தைக் கடந்தேனும்
உன்னை கரம்பிடிப்பேனடி,
உயிர் பிரிந்தாலும்
என் நினைவுகள்
உன்னை சுமக்குமடி,
காலங்கள் காவியம் வடிக்குமடி,
கதிர்காதலன் நான்
என் காதலியும் நீயடி,
நெஞ்சில் நிறைந்தவளே
மனதில் உறைந்தவளே,
காதலின் இளந்தளிரே,
கண்ணால் என்னை மயக்கினாயே,
காமுகன் என்னை ஆட்கொண்டானடி,
காமுகி நீயும்
கண்டும் காணாதது ஏனடி,
இந்திரன் வீட்டு சுந்தரியே,
சந்திரன் வீட்டு தேனிலவே,
உன் முகம் என்னை கொல்லுதடி
நீரில் நிழலாய்
உன் முகத்தை
சுமக்கின்றேன் நானுமடி
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
நீரில் நிழலாய் உன் முகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment