Wednesday, 22 November 2017

தமிழர் திருநாள்

தமிழர் திருநாள்
--------------------------
பொங்கி வரும் பொங்கலாய்
தீமைகள் மனித மனங்களிலிருந்து
வெளியேறும் நன்னாள் - ஒருவர் வாழ மற்றொருவரை கெடுக்காத இனிய நாள்,

தமிழ் பாரம்பரியத்தை புதிப்பிக்கும் நாள்,
பண்பாட்டை மீள்கொணரும் நன்னாள்,
இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் -
புனித நாள்,

சுனாமியை பார்த்தோம் -
தானே, நீலம் என புயல்களைக் கண்டோம்,
மீண்டு வருவதற்குள் பெருமழை வெள்ளம்,
திரும்பிப் பார்க்க மழைப் பொய்த்திட
கடும் வறட்சி, பஞ்சம் நிலைத்திட

இன்னல்கள் இல்லாத -
இயற்கை இடர்பாடுகள் அற்ற
தமிழர் திருநாளை இனி கேட்கின்றோம்
இயற்கை மாதாவை பிரார்த்திக்கின்றோம்
---------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
நிருபர், தினத்தந்தி,
பாரதியார் வீதி
தெற்கு பெரியார் நகர்,
விருத்தாசலம்
கைப்பேசி : 99 435 49913

No comments:

Post a Comment