அலை எழுதும் கடிதம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அடுத்த நிமிடமே
நாங்கள் இறந்து விடுவோம்,
அப்படி இருந்தும்
என் காதலி பின்னாள் வந்தேன்,
உங்கள் காலடிச் சுவற்றை
களவாடிச் சென்றேன்!
வருவதும் போவதும்
எங்கள் வேலை,
ஊதியமில்லாமல் உழைக்கும்
பணியாளர்கள் நாங்கள்,
சோகமும் உண்டு,
காதலும் உண்டு.
தென்றல் காற்றில்
கடல் அன்னையின் மடியினில்
தவழ்ந்து விளையாடும்
குழந்தைகள் நாங்கள்.
காதலர்கள் எங்களை
தொட்டு விளையாடுகையில்
அவர்களை தொட்டுவிட்டதால்
நாங்கள் மகிழ்ந்துதான் போனோம்,
நேற்றிருந்த வானத்தின் மேகமோ
இன்று இருப்பதில்லை,
நம் சுக துக்கங்களை
நாளை காண்பதும் இல்லை,
எங்களை ரசித்திட
கூட்டம் இங்கே கூடுது,
மழலைகளும் எங்களை
குழந்தைகளாய் கொஞ்சுகிறது,
காதல் மொழி பேசிடுது,
கண்ணே, மணியே,
எனக் கொஞ்சும் காதலரே!
எங்களை ரசித்து
காதலை வளர்த்திடுவீர்,
கடல் அலையைப் போல
காதல் கரையை அடைந்திடுவீ்ர்!
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment