Wednesday, 22 November 2017

மின்னிடும் கண்கள்

மின்னிடும் கண்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பூங்குயில் பேசிடும்
பார்வையில் மின்னிடும்
வண்ணத்துப் பூச்சியாய்
பறந்திடும் தோற்றத்தில்
மின்னிடும் என்னவளே,

தோகை விரித்தாடும்
மயில்களும் உன்
அழகைக் கண்டு
நாணம் கொள்ள
கண்ணால் கவர்ந்தவளே!

கூவிடும் குயில்களும்
கூவலை நிறுத்திட
பறந்திடும் பருந்தும்
வேட்டையாட மறந்திட
மாயம் என்ன செய்தவளே!

தென்றல் காற்றும்
இதமாய் வீசிடும்,
உன் மின்னிடும்
கண்ணை பார்த்து
தென்றலும் நின்றிடும்.
மாயம் தான்
என்ன செய்தாயோ!

ஊர் ஊராய்
போகும் மேகக்கூட்டங்களும்
கொடியிடை அழகைப்
பார்த்ததும் அப்படியே
நின்றுவிட,
மின்னிடும் கண்ணால்
கவர்ந்தாயோ!

மின்னிடும் கண்ணில்
பூத்திடும் பூவாய்
மலர்ந்தவளே,
காந்தப் பார்வையால்,
கட்டிப் போடும்
கன்னிப் பெண்ணவளே!

தேரோடும் வீதியில்
திருவிழாவாய் வந்து,
தாமரையாய் மலர்ந்து
சுட்டும் விழிப் பார்வையால்,
மின்னிடும் கண்ணால்
துள்ளித் திரிந்திடும்
காளைகளை கவிழ்த்தவளே,

வானாகி மண்ணாகி,
உலகம் தலை கீழாகி
கண்டங்களும்
பிளவாகும் உன்
மின்னிடும் கண்களாலே!
- - - - - - - - - - - - - - - - - - - - - ..
அன்புடன்
இல.வீரபாண்டியன்







No comments:

Post a Comment