இரவின் மடியினில்
-------------------------------
பொதிகை மலைச்சாரலிலே
செந்தமிழ் கவிதைகள் கொட்டிட
மீன் குஞ்சுகளைப்போல
துள்ளித்திரிந்திட
கவலைகளை மறந்திட
பழையன கழிந்திட,
புதியன புகுந்திட,
தமிழ் என்னும் மழைச்சாரலிலே
நனைந்து,
மழை பொய்த்தும்போக
கற்பனை மழையில் குடைப்பிடிக்கும் சின்னஞ்சிறு குயில்கள்
இரண்டு பொங்கலில் மழையை வேண்டுதடி,
இரவின் மடியினிலே உறங்குதடி!
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment