மெட்டுப்போடு
- - - - - - - - - - - - - - - -
மெட்டுப்போடு டப்பாங்குத்து ,
நீயும் போடு செம்ம குத்து,
ஆத்துப் பக்கம் போகாதடி
காத்து கருப்பும் அடிச்சிருண்டி
செக்க செக்க செவந்தவளே
சக்க போடு போடுறியே,
நீயும் பாய்ந்து ஓடுறியே!
மாமனும் நான் வந்துடுறேன்
மேற்கால நாம ஒதுங்கிடுவோம்.
சாயங்காலம் வந்துடுவோம்,
(மெட்டுப்போடு)
கம்புக் காடு பக்கம் இருக்கு
காத்தால போனோமுன்னா,
ஆறுதலா பேசிடலாம்,
வாடி புள்ள, மாமனும் கூப்பிடுறேன்,
(மெட்டுப்போடு)
கருப்பு மை வச்சிக்கிட்டு
பூ நிறைய பின்னிக் கிட்டு,
மாமனையும் மயக்கிக்கிட்டு,
அன்ன நட நடந்துக்கிட்டு
போறவளே என் மாமன் மவளே !
வாடி புள்ள காதல் பாடம் படித்திடுவோம்,
குடும்பம் நடத்த ஒத்திகையும் பார்த்திடுவோம்,
(மெட்டும் போடு)
உன் செக்க செவந்த இதழும்
உன் பின்பக்க தரிசினமும்
முன் பக்க நளினமும்
வெட்கப்பட்டு சிறிக்கும் முகமும்
என்னை அழைக்குதடி
ஓடி வாடிப்புள்ள,
வாழைத் தோப்பில் ஒதுங்கிடலாம்,
(மெட்டுபோடு)
செவ்வாழை பழமும் நானடி,
செவ்விதழ் கிண்ணம் நீயடி,
சேர்ந்துப்புட்டா சொர்க்கம் தானடி
உன் நினைப்பில் மாமனடி
சொல் பேச்ச கேளடி என் கண்மணியே,
என் மணிக் குயிலே.
( மெட்டுப்போடு)
சீர் செனத்தி எதுவும் வேண்டாம்
உன்னை மட்டும் கேட்டுப் புட்டேன்
அத்தைக் கிட்ட சொல்லிப்புட்டேன்
மாமனுக்கிட்டே கேட்டுப்புட்டேன்
மறிக் கொழுந்தும் வாங்கி வந்தேன்,
செண்பகமே, என் செவ்வந்திப் பூவே,
(மெட்டும் போடு)
தஞ்சாவூர் மண்ணை வாங்கி
நெல்லையில் தண்ணி வாங்கி
திருச்சிப் பக்கம் நகையை வாங்கி
சென்னையில செய்தேனடி,
உன்னை நானும் வடித்தேனடி,
நெஞ்சுக்குள்ள சுமையை வாங்கி
பஞ்சுக்குள்ள தீயை வச்சி
நானும் தான் எறியுரேன்டி
நீ யில்லாத உலகத்துல,
உன் நினைவில் நானும் வாழ,
உண்ட களைப்புத் தீர
உன் மடியில நான் சாய்ந்திட
உடல் பசி தீர்ந்திட
வேண்டுமடி நீ எனக்கு,
(மெட்டுப்போடு)
கண் இமையாய் காப்பேனடி_
வேலியாவும் இருப்பேனடி,
என்னுள் பாதி தருவேனடி
நீயும் எனக்கு வேணுமடி
டப்பாங்குத்தும் போட்டேனடி,
மெட்ட போட்டு பாடியே
நானும் தலையும் சாய்ந்தேனடி,
எட்டிக் கொஞ்சம் பார்த்தியா,
மெட்டக்கொஞ்சம் கேட்டியா,
எட்டிக் கொஞ்சம் பார்த்தியா,
மெட்டக் கொஞ்சம் கேட்டியா,
Wednesday, 22 November 2017
மெட்டுப்போடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment