பாலைவனப் பூக்கள்
---------------------------------------
செந்தமிழ் நாட்டினிலே
வானம் மும்மாரிப் பெய்திடவே,
கழணியெல்லாம் செழித்திருக்க,
நெல்மணிகள் விளைந்திடவே,
தன்னிறைவு நிறைந்திருக்க
கேடுகெட்ட அரசியல்வாதிகளால்,
வீனாய்ப்போன அதிகாரிகளால்,
தரம்கெட்ட அரசியல் நடந்திடவே,
வறுமை மக்களை வாட்டுதப்பா.
மக்கள் நலம் பெறும் திட்டங்களை
கொள்ளையடிக்கும் கூட்டம்
இங்கே அலையுதப்பா,
ஊழல் செய்தே பெருத்துப்போன
பெருச்சாளிக் கூட்டமும் சுற்றி வருகுதப்பா,
மனம் நிறைவாய் ஊதியம் பெறுவான்
கைநிறைய கையூட்டும் வாங்குவான்,
பணத்திற்கு மட்டுமே அடிமையானான்,
காலம் மாற மனிதன் மாறிய
காட்சியும் இங்கே நடக்குதப்பா,
இயற்கையை நேசிக்க மனிதன் இல்லை,
ஏரி, குளத்தை ஆக்கிரமித்தான்,
நிலங்களை மனைகளாக்கினான்,
மரத்தை வெட்டி காட்டை அழித்தான்,
இதன் விளைவுகள் தரும் பாடம்அதனை
பாலைவன பூக்களாய் மக்கள் படித்திட
என்று மாறும் இந்தக்காட்சியும் கானமும்.
_________________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Wednesday, 22 November 2017
பாலைவனப் பூக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment