கவிஞர்களுக்கும், கவிக்கும் முக்கியத்துவமே இல்லை போலும்!
கலிகாலம்,
கவர்ச்சி போட்டோவுக்கும்,
அழகுக்குமே, இங்கே
முக்கியத்துவம்,
கள்ளக் காதல்,
விபச்சாரக் கதைகளுக்கு
கிடைக்கும் முக்கியத்துவம் கூட
விவசாயத்திற்கும்
கிடைக்கவில்லை,
கவிஞர்களின் மன ஒட்டத்திற்கும்
வரவேற்பு கிடைக்கவில்லை!
உடலைக் காட்டும் பெண்ணிற்கு
கிடைக்கும் லைக் கூட
வியர்வையை கொட்டும்
விவசாயிக்கு
கிடைக்க வில்லை
முலையழகை ரசிக்கும்
கண்கள்
விவசாயத்தை
கண்ணும் கருத்துமாக
ரசிக்கவில்லை
பின்னே எப்படி
சாப்பாட்டை ருசிக்க முடியும்,
கால் காணி நிலம்
இல்லாதவனுக்கு இருக்கும் அக்கரை
ஏக்கர் கணக்கில் உள்ளவனுக்கு இல்லையே
என்பதே வேதனை!
டிக் டாக்கை ரசிப்பனுக்கும்,
பேஸ்புக் போதை உள்ளவனுக்கும்,
ட்வீட்டரை தட்டுபவனுக்கும்,
வாட்சப்பை நோண்டுபவனுக்கும்
எங்கே அக்கறை பிறக்கப் போகிறது,
கத்திப் போன்ற படங்களை ரசிப்பவனின்
புத்தி எங்கே போகிறது!
நூற்றில் பத்து பேர் மட்டுமே
விவசாயத்தை பார்த்தால்
தொன்னூறு பேர்
பஞ்சத்தில் தான் வாட வேண்டும்
இந்நிலை மாற
தன்னிலைக்கு வந்து
சமுக வலைதள போதைகளை மறந்து
விவசாயத்தை காப்போம்,
தமிழை வளர்ப்போம்,
கவிஞர்களை காப்போம்,
விவசாயமே முதன்மை தொழிலாகக் கொள்வோம்!