Wednesday, 22 November 2017

சுகமான சுமைகள்

சுகமான சுமைகள்
_____________________
பத்துமாசம் சுமந்த தாயை
இறுதியில் சுமப்பது உன் கடமையடா !
தோலில் தூக்கி வளர்த்த தந்தையை
காலமெல்லாம் சுமக்க வேண்டுமடா!
கதையும் கூறி, பாட்டும் பாடி
அறிவுரைக் கூறிய தாத்தா பாட்டிக்கும்
வயதான காலத்தில் வழிகாட்ட வேண்டுமடா,
உன்னை மட்டும் நம்பி வந்த
உன் மனைவியை,
வேலி போல காக்க வேண்டுமடா!
உன் மனைவி சுமந்து பெற்ற பிள்ளைகளுடன்,
அவளையும் சேர்த்து  சுமப்பதே,
உன் பிறப்பின் ரகசியமடா,
வேண்டுவோர்க்கு வேண்டுவதெல்லாம்
தந்தருளி,
தூற்றுபவர்கள் தூற்றட்டும் என்றென்னி,
உற்றாரையும், உறவுகளை சுமப்பதுக்கூட
நம் சுகமான சுமைகள்!
" ______________________
                       அன்புடன்
    விருத்தாசலம் இல.வீரபாண்டியன்








No comments:

Post a Comment