Monday, 29 April 2019

கானூர் சாமிக் கண்ணு படையாட்சியார்

வன்னியர்களின் பொற்காலம்
கானூர்.திரு.சாமிக்கண்ணு
படையாட்சி வாழ்ந்த காலம்.

கானூர்.திரு.சாமிக்கண்ணு படையாட்சி , ஆட்சி,
அதிகாரத்தில் இருந்த போது
வன்னிய இளைஞர்களுக்கு
கல்வி தகுதிக்கேற்றவாறு
அதிகாரிகளை நேரிடையாக
பேசி, அந்த தருணத்திலேயே
அரசு பதவிகள் வாங்கி தந்தவர்.

தற்போதைய
வன்னிய தலைவர்கள்
போன்று
அரசியல் சூதாட்டம் ஆடாமலும்

வன்னிய அரசியல்வாதிகள்
போன்று
சுயநல அரசியல் செய்யாமல்

கானூர்
திரு.சாமிக்கண்ணு படையாட்சி
தான் பிறந்த சாதிக்கு
தன் அதிகாரத்தை முழுவதும்
பயன்படுத்தி, நித்திய தினமும்
உதவி செய்துள்ளார்.
இவர் வாழ்ந்த காலம்
வன்னியர்கள் பொற்காலம்

தமிழ் நாட்டில் தென்னார்க்காடு மாவட்டத்தில் கானூர் சாமிக்கண்ணு படையாச்சி என்று ஒரு மனிதர் இருக்கிறார்.
எளிமையும், நேர்மையும் கொண்ட மக்கள் நலம் பற்றியே எப்போதும் சிந்திப்பவர்.
அவரைப் போல எல்லா அரசியல்வாதிகளும் செயல்பட்டால் இந்தியா விரைவில் முன்னேறிவிடும். என்று முதல்வர் திரு. காமராஜ்.புகழ்வார்.

சாமிக்கண்ணு படையாச்சி காலம் ஒரு பொற்காலம்.
வன்னியர்கள் வளர்ச்சியில் அவரது பங்கு மிக முக்கியமானது.

1894 ல் பிறந்து 1984 வரை
90 ஆண்டுகள் சிறந்த செயல் வீரராக வாழ்ந்தார்.
அதிகார வர்க்கதிற்கு அவர் கொடுத்த முதல்அடி.

விவசாயி ஒருவர் மாடு ஒன்று பக்கத்து வயலில் மேய்ந்து விட்டது, வயலின் சொந்தக் ஊர் மணியம் துரைசாமி பிள்ளையிடம் முறையிட ஊர் மணியம் ,மாட்டை தன் வீட்டில் கொண்டு கட்டி வைத்து விட்டார்.

சாமிக்கண்ணுவிற்கு கோபம் வந்து மணியம் வீட்டிற்கு சென்று மாட்டை பட்டியில்தான் சேர்க்க வேண்டும் எதற்காக உங்கள் வீட்டில் கட்டி வைத்துள்ளீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நீங்கள் செய்வது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று கூறி இனிமேல் இந்த பதவிக்கு நீங்கள் தகு‌தி இல்லாத நபர் என்று புறப்பட்டு சென்றவர்..!
யாரைப் பார்த்தார் என்ன செய்தார் என்று யாருக்குமே தெரியவில்லை, திரும்ப ஊர் வரும்போது
துரைசாமி பிள்ளையை மணியம் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்து விட்டு.
சாமிக்கண்ணு படையாச்சி கானூர் மானியமாக பதவிக்கான அரசு ஆணையுடன் ஊருக்குள் நுழைந்தார்.

மாவட்டமே சாமிக்கண்ணு படையாச்சியை திரும்பி பார்த்தது. அன்று முதல் இறக்கும்வரை சிறந்த மக்கள் சேவாகராக வாழ்ந்தார்.

அவரின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.
1967 இல் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் பெருந்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்
வெற்றி வாய்ப்பு மங்கலாக இருந்ததது.
அதை கேள்விப்பட்ட L. இளையபெருமாள் தன்னிடமிருந்த 3 ஊராட்சித் தலைவர்களை நேரில் சென்று உங்களை போன்றவர்கள் தோல்வி அடையக்கூடாது என்று ஆதரவு தெரிவித்து இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டு கண் கலங்கினார்கள் சாமிக்கண்ணு படையாச்சி வெற்றி பெற்றார்.

அரசியல் நாகரீகம் அப்போது அப்படி இருந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

கானூரார் 1957 ல் புவனகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1946 லேயே சிதம்பரம் தாலுக்கா போர்டு தலைவராக இருந்த சாமிக்கண்ணு படையாச்சி தம்மை உழைப்பாளர் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

நாடெங்கும் 19 சட்டமன்ற உறுப்பினர்களையும்,
4 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்ற கட்சியாக வன்னியர் பலம் காட்டினார்
திரு.ராமசாமி படையாச்சியார்.

1952 ல் விருத்தாசலம் தொகுதியில் காங்கிரசின் வேட்பாளராக வழக்கறிஞர் திரு, நாராயணசாமி பிள்ளையை தோல்வி அடையச்செய்து உழைப்பாளர் கட்சியின் பரமசிவம்
(கீழ்ச்செருவாய் கிராமம்) வெற்றி பெற்றார்.
தோல்வி அடைந்த நாராயணசாமி பிள்ளை.. வெற்றி பெற்ற பரமசிவதிற்கு 25 வயது ஆகவில்லை என்று வழக்குப்போட்டு, மேல்மட்ட ஆதரவுடன் தேர்தல் ரத்து செய்யப் பட்டது.

மீண்டும் 1953 ல் விருத்தாசலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
இப்போது கானூர் சாமிக்கண்ணு படையாச்சி களத்தில் இறங்கினார் அதே நாராயணசாமி பிள்ளையை தோல்வி அடையச்செய்து..
4.3.1953 ல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.     

கானூர் சாமிக்கண்ணு
படையாட்சி அவர்கள்
வன்னிய இளைஞர்களின்   
கல்வி தகுதிக்கு ஏற்றவாறு
அதிகாரிகளிடம் நேரிடையாக
பேசி, அந்த தருணத்திலேயே
அரசு பதவி வாங்கி தந்தவர். 

இவர் காலம்
வன்னியர்கள் பொற்காலம்

நன்றி ...இறைவனின்
வரலாற்றில் வன்னியர் மகாவம்சம்

விஆர் ராஜன் .பி இ.எம் ஏ.

VR RAAJAN