Tuesday, 26 November 2019

தலைவன்

தலைவன் உதயம் ஆகும் நேரம், /
தகுதியான உரியவனைக் கண்டறியும் காலம், /
விரைவில் கனியும் அந்த நேரம், /
தவற விட்டால் தவறும் இந்த யுகம், /
= = = = = = = = = = = =
வீரா

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே
= = = = = = = = = =
ஞாபகம் வருதே,
மழலையில் செய்த குரும்புகள்,
அம்மாவின்
செல்ல அதட்டல்கள்,
அப்பாவின் மிரட்டல்கள்,
நினைவில் வருதே!

ஓடி ஆடியக் காலங்கள்,
கோட்டிப்புல் அடித்து
அடிக் கணக்கை அளந்து,,
காயே கருப்பங்காய் பாடியப் படியே
ஆடிய கல்லாட்டங்கள்,
ஞாபகத்தில் உதிர்கிறதே!

தண்ணீர் நிரம்பிய
கண்மாய்களில்,
போட்ட ஆட்டங்கள்
நட்புகளின் கூட்டங்கள்,
நினைவை வருடுகிறதே!

மாசிமகத்தைக் காண
மக்கள் கூட்டத்தில்
சிக்கி,
விளையாட்டுப் பொம்மைகளை
வாங்க முடியாமல்
ஏமாற்றத்துடன் திரும்பிய
தருணங்கள் கனவாகியதே!

தொடுதிரையே நேரத்தை
விழுங்கையில்,
மீண்டும் இளமையோ
திரும்பாது!
கடந்ததை ஞாபகப்படுத்தினால்
இன்பங்களும்,
துன்பங்களும்,
மனதில் தோன்றி
மறைகிறதே!
= = = = = = = =
வீரா

புரிதல்

உயிரானதால் உறவானோம்,
நேசம் பாசம் கொண்டோம்,
பிரிவு வந்ததாலே,
புரிதலும் பறந்து வந்தது.
== == = = = = = = = =
வீரா

பாதை மாறிய பயணம்


= = = ==============
கிளியாக மனைவியிருக்க,
மிருகமான துணையெதற்க்கு,
வாழ்க்கை பயணம்,
தடம் மாறினால்,
சமுதாயம் கேளியாகும்!
= = = = = = = =
வீரா

மருத்துவத்தின் மகத்துவம்

மருத்துவத்தின் மகத்துவம்
= = = = = = = = = = = = = = = =
பித்தத்தை தெளிய வைக்கும் இஞ்சி, /
தினமும் உண்டால்  ஓடிடும் நோய்கள் அஞ்சி, /
கஞ்சியுடன் இஞ்சி துவையல் உண்டிடலாம், /
ஆரோக்கியம் மேம்படுவதை கண்டிடலாம், /
இஞ்சி கலந்த தேநீர் குடித்திட, /
சுருசுறுப்பு தானாய் வந்திடும், /
இஞ்சியின் மருத்துவம் மகத்துவம் அறிந்தே, /
சமையல் அறையில் தனி இடமும் உள்ளது. /
= = === = = = = = = =
வீரா

Monday, 25 November 2019

திரிபாதி வாழ்க

தமிழுக்கும் அமுதென்று பேர்,
திரிபாதிக்கு நன்றி எங்களின் நேர்,
உங்களைப் போல் சிலரால் தமிழருக்கு பெருமை,
பாரதியும், பாரதிதாசனும் கண்ட கனவு நினைவாகையில்,
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே,
எல்லாம் இந்தி மையம் ஆகையிலே,
காவல் துறை தமிழ் மையம் ஆகிறதே,
ஆடுவோமே, கூடுவோமே,
காவல் துறையை வாழ்த்துவோமே,
நீதித்துறையும் மாறிடும் என நம்புவோமே,
மற்றத் துறைகளையும், தமிழுக்கு மாற்றுவோமே,
அறம், பொருள், இன்பம் மையமாக தமிழராய் வாழ்வோமே!
===========
மாண்புமிகு திரிபாதி அய்யாவிற்கு வாழ்த்துக்களுடன்,
தமிழர் வீரா

வீரம்

வீரம் விளைந்த தமிழ் மண்,
புலியை முறத்தால் விரட்டி,
தன் பாலகனை போருக்கு அனுப்பி,
மானம் காத்த பெண்கள் பிறந்த மண்!
= = = = = = = = =
வீரா

காய கற்ப மூலிகை

காய கற்ப மூலிகை
= = = = = = = = = =
சித்தர்கள் போற்றும் கற்றாழை, - அது /
காயக் கற்ப மூலிகை, /
இளமையைக் காத்து,
உடல் சூட்டைத் தணித்து, கொழுப்பைக் கரைத்து, /
உடலை வனப்பாக்கும் தாவரம், /
தினம் தினம் சாப்பிடும் மருந்தல்ல, /
ரத்தத்தைப் பெருக்கும் அமிர்த லேகியம், /
வீட்டுக்கு ஒரு கற்றாழை வளர்ப்போம், /
நோய் நொடியின்றி வாழ்வோம்!/
= = = = = = =
வீரா

மாந்தோப்புக் கிளியே (கிராமியம்)

மாந்தோப்புக் கிளியே
= = = = = = = = = = = = = =
மாந்தோப்புக் கிளியே,
மச்சான் நான் அழைக்கின்றேன்,
வாடிப் புள்ள வெளியே,
வக்கனையாப் பேசும் புயலே
நீ வயக்காடு வாடி மயிலே,

மாங்காயில செங்காய கடிக்க
தோப்புக்குள்ள
அணிலுக் கூட்டம் சுத்துது,
உன்ன பார்த்தாக்க,
மாங்காயென்று
கடிச்சிடும் வாடிப்புள்ள வெளியில,

உன்னை ருசிப் பார்க்க,
மாமன் மகன் காத்திருக்கேன் வெளியில,
நீ பாவாடை சட்டையில் பவனி வந்தா,
கிளிகள் கூட்டமோ மவுனமாய் பார்க்குதடி,
மாங்கனி நீதானோ,
உன்னை ருசிப் பார்க்க ஏங்குதடி,

ஏலேலங்கிளி நீதானடி,
பைங்கிளியும் நீ தாண்டி,
வேட்டக்காரன் வந்திருக்கேன்,
வசமா வந்து மாட்டிக்கோடி,

கண்ணாமூச்சி காட்டியது போதும்
கண்ணன் நான் காத்திருக்கேன்,
ரெண்டு மாங்கனிக்காக ஏங்கியிருக்கேன்,
மல்கோவா பறிக்க வேணும், ருசிக்க வேணும்,
வந்திடடி என் ராதைக்  கண்ணே,

அத்த மக ரத்தினம் நீ,
மாமன் மகன் மரகதம் நான்,
பவுர்ணமி வெளிச்சத்துல
பிரகாசிக்கலாம் வாடிப் புள்ளே!
= = = = = = = = = = = =
வீரா

படைக்கும் பறவைகள்

படைக்கும் பறவைகள்
= = = = = = = = = = = =
தேசம் விட்டு தேசம் போகும் பறவைகள் /
அவை இயற்கையின் வரம், /
உழவன் உழுததுமே இரைப் படைப்பதால்,
விவசாயி இறைவனாகிறான், /
பசுமை கானகமாக இருப்பதால் /
விவசாய நிலமோ சொர்க்கமாகின்றன, /
கண்டம் விட்டு கண்டம் வந்து /
அரிய மர வகைகளை விதைக்கின்றது மண்ணிலே /
படைப்பதிலே இறைவனுக்கு நிகரானது, /
= =========
வீரா

இன்பம்

இன்பம் இனியது, துன்பம் கொடியது,
இனிய உறவால் இன்பம் தோன்றும்,
தீய நட்புகளால் துன்பம் உண்டாகும்,
நாம் தேடுவதே நமக்குக் கிடைக்கும்.

மனம் சிதைக்கும் மனிதர்கள்

மனம் சிதைக்கும் மனிதர்கள்
= = == = = = = = = = = = = = =
மனம் என்னும் உலகில்
பணம் என்ற நரகம் முளைத்தது,
மனிதம் மறைந்ததாலே
மனிதன் சுயத்தை இழந்தான்,

நல்லது என தெரிந்தும்
அதனை செய்ய மறுக்கும் மனிதன்,
தீயதை அறியாமல் செய்ததாக
மன்னிப்புக் கேட்டதே மிச்சம்,

மற்றவரின் எளிமையை
நகைப்புக்கு உள்ளாக்கி,
மனம் சிதைக்கும்  மனிதர்களால்
நேயம் மறைந்து விடுகிறது,

எளிமையாய் வாழும் மனிதனின் மனம் சிக்கலாகி விடுகிறது,
சிக்கலை அகற்றி மனம் தெளிவதற்குள்
எல்லாம் முடிந்து விடுகிறது,

ஆசையை அகற்றி,
மோகத்தை குறைத்தால்
மற்றவரின் மனதை நோகடிக்காமல்,
மனச் சிதைவை அகற்றி,
நலமுடன் வாழலாம்.
==== = = = = = = = = = =
வீரா

கானல் நீர் ஆகாதே

கானல் நீர் ஆகாதே
= = = = = = = = = = = =
பெண்ணே உன்னில் தஞ்சம் அடைந்திட
தேடி வருகிறேன்,
கண்ணே நீ கானல் நீர் ஆகி விடாதே,
நான் கரைந்து விடுவேன்!

வானவில்லின் பொன் நிறமே,
மழையில் புன்னகைக்கும் பொன் நகையே,
ஒளியாய் பிரகாசிக்கும் சந்திரனே,
நீ மறைந்து விடாதே,
நான் உருகி விடுவேன்!

தென்றலில் ஊடுருவும் கண்மணியே,
சாரலாய் குளிர்விக்கும் தெம்மாங்கு நீயே,
என்னை சிறைப்பிடித்த சிங்காரியே,
நீ மின்னலென மறைந்தால்,
நான் மழையாகிடுவேன்!

மனம் என்னும் சிறையில் அடைத்தாய்,
காதல் என்னும் கோட்டையில் வைத்தாய்,
நீ மண்ணில் புதைத்தாலும்,
என் உயிர் உன்னில்  இருக்க,
நான் கல்லறையில் இருந்து மீண்டு வருவேன்,

கரம் பிடிக்க ஆசைப்பட்டேன்,
என்னை பாதாளத்தில் தள்ளி,
கண்ணே நீ கானல் நீராகி விடாதே,
என்னைக் காணாமல் செய்து விடாதே!
= = = = = = = = = = = = =
வீரா

Sunday, 24 November 2019

பூவோடு பூவாகி மலர்ந்தாளோ பூவையிவள்

பூவோடு பூவாகி மலர்ந்தாளோ பூவையிவள்
= === = = = = = = = = = = = = = = = =
என்னவள் மலரல்லவோ,
பூவோடு பூவாகி மலர்ந்தாளோ பூவையிவள்,
பூந்தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
யார் அழகென்று,
இவளுடன் போட்டியிடுகின்றன!

மலர்கள் தினமும் மலர்ந்து உதிர்ந்துவிடுகின்றன,
என் பாவையிவள் ஒரு முறை மலர்ந்து
தினம் தினம் அழகுக்கே சவால் விடுக்கின்றாள்!

குறிஞ்சி மலர் மலர்வது மகாமகத்திற்கு ஒரு முறைதானே,
என் இனியவளோ தினமும் மலர்ந்து அதிசயிக்க வைக்கின்றாள்!

சாமந்தி மலர்ந்தால் மஞ்சளாக காட்சித் தரும், பூத்து உதிரும்,
என்னவள் தினம் தினம் மஞ்சள் பூசி சாமந்தியாக மலர்ந்து விடுகிறாள்,

ரோசா மலர் மலரலாம்,
மணக்கலாம், மருந்தாகலாம், திரவியமாகலாம்,
என்னவள் தினம் தினம் மணம் வீசி மருந்தாகிறாள், சோம்பலைத் துரத்தி விடுகின்றாள்,

எந்த மலர்களும், உன் மலர்ச்சிக்கும், மணத்திற்கும் ஈடாகவில்லை,
நீயோ மலர்களை நாடுகிறாய்,
என் மனமோ உன்னையே நாடுகிறது!
= = = = = = = = = =
வீரா

Friday, 22 November 2019

பூக்கள்

பூக்கள் :
========

இயற்கை படைப்பின் உன்னதம் /
நறுமணத்தின் அடையாளம் /
காதலின் சாட்சி, /

ஏற்றுக தீபம்

ஏற்றுக தீபம்
= = = = = = = =
ஏற்றுக தீபம், வஞ்சனைகள் அழியட்டும்,
புத்துணர்வு நிரம்பட்டும்,
தீய சக்திகள் தெறித்து ஓடட்டும்,
நல்ல சக்திகள் தீயாய் நுழையட்டும்,

நெய் தீபம் ஏற்றிடுக , நெஞ்சங்களில்
நல்வினைகள் விதைக்கட்டும்,
ஆத்திரம், பொறாமைகள் அறுவடையாகட்டும்,
அன்பும், பாசமும் விளையட்டும்,

தீப ஒளியால் வீடுகள் பிரகாசிக்கட்டும்,
தெய்வங்கள் அருளால்,
குடும்பங்கள் தழைக்கட்டும்,
சந்ததிகள் செழிக்கட்டும்,

கார்த்திகை தீபத்தால்
தீவினைகள் விலகட்டும்,
நல்வினைகள் உடலில் ஏறட்டும்,
உடல் நலன் பெறட்டும்,

நோய் நொடிகள் நீங்கட்டும்,
சகல செல்வங்கள் பெருகட்டும்,
தன்னலம் மறையட்டும்,
பொது நலன் வளரட்டும்,

தீபங்கள் ஏற்றட்டும்,
அதில் மறைந்திருக்கும் அறிவியல் அதிசயம் மிளிரட்டும்,
பாரம்பரியம் வளரட்டும்,
= = = = = = = = = = = =
வீரா

Thursday, 21 November 2019

இளமையிற் கல்வி

கணக்கு வழக்கில் திண்டாட்டம், /
சுவற்றில் கோடாய் நிறைகிறது,/
இளமைக் கல்வியை இழந்ததன் எதிரொலி/
முதுமையில் பிரகாசம் குறைகிறது/

கடலன்னை மடியில் வலைகள்

கடலன்னை மடியில் வலைகள்
= = = = = = = = = = = = = = = = = = =
கடற்கரையில் பிறந்து,
கடல் நீரைப் பருகி,
உப்புக் காற்றை சுவாசித்து,
கடலன்னையின் கருணையில்
வாழும் மீனவன்,

கடலுக்குள் செல்லும் அவனுக்கு
கடல் தாய் தான் பாதுகாப்பு,
சுழன்றடிக்கும் சூறாவளியில் சுழன்று,
சீறி வரும் அலையை எதிர்த்து,
கடலன்னை மடியில் வலைகளை விரித்து,
அவள் அருளும் சீதனத்தில் பிழைப்பை நடத்தும் தூயவன்,

கரையில் தன் குடும்பத்தைக் காக்க வைத்து,
ஆழ்கடலில் நாள் கணக்கில் காத்திருந்து மீனைப் பிடித்து,
கரை சேர்த்து காசாக்கும் மாயவன்,

எதிரி நாட்டு ராணுவத்திடம் சிக்கி,
அறுத்தெறிந்த வலையுடன்
படகை இழந்து,
மார்பில் பாய்ந்த குண்டுடன்
சடலமாய் மிதந்து வர வேண்டாம் என கடவுளை வேண்டும் உறவுகள்.

எதிரி நாட்டிடம் இருந்து ஊதியம் பெறாமல் கடல் எல்லையைக் காக்கும்
வீரன் அவன்,
மீனவர் தினத்தில் மீனவனைப் போற்றுவோம்,
= = ====== = = = = =
வீரா

அழிவின் விளிம்பில்

அழிவின் விளிம்பில்
= = == = = = = = = = = =
மரங்களை வெட்டினோம்,
அதனை நம்பியிருந்த உயிர்களை மறந்தோம்,
அலைபேசி கோபுரங்களின் அலைவரிசையில் சிட்டுக்குருவிகள் அழிவதைக் கண்டோம்,
நேற்று வாழ்ந்த உயிர்கள் இன்று ஓவியமானது,
இருந்தும் மரங்களை காக்க தவறினோம்,
நாம் நாகரீக வாழ்க்கைக்கு மாறினோம்,
பிற உயிர்களின் வாழ்வை மறந்தோம்,
வெட்டிய மரங்களுக்காக,
மரக்கன்றுகளை நடுவோம்,
சிற்றுயிர்களின் அழிவைத் தடுப்போம்!
= = == = = = = = = = =
வீரா

உழவனின் தோழன்

உழவனின் தோழன்
= = = = = = = = = = = =
உழவனின் நண்பனாக மாடுகள், /
உற்ற தோழனாக,
பிரதிபலன் எதிர்பாராத உயிர்களாக, /
தான் உண்ணும் உணவுக்கு,
நன்றியை காணிக்கையாக்கும், /
ஐந்தறிவு கடவுளின் படைப்பு, /
விவசாயி விளைவித்ததை
சிந்தாமல் சிதறாமல், /
வீடு கொண்டு வந்து சேர்க்கும், /
குடும்பத்தில் ஒரு உறுப்பினராக, /
உழவுக்கும் உயிருக்கும் உதவிடும் உன்னதக் கடவுள்!/
= = = = = = = =
வீரா

துன்பம்

துன்பம்
= = = = = = =
துன்பம் தொடர்ந்து வந்து தாக்கும், /
இன்பமோ பின் தொடரும் - அது /
மீண்டும் காணாமல் போகும் போது /
மனம் மட்டும் தளரக் கூடாது./
=========
வீரா

ஆணிவேர்

ஆணிவேர்
= = = = = = = = = =
ஆண் அவன் தன்
தாயை சமாளித்து,
மனைவியை சாந்தப்படுத்தி,
குழந்தைகளை காத்திட
அவன் படும் பாடு
வறட்சியில் மரத்தின் வேர் நீரைத் தேடி ஓடும் ஓட்டத்தின் பாடு,
தன் துன்பத்தை வெளியில் காட்டாமல்
கர்ப்பிணிப் பிரசவிக்கும் வலியும்,
அவன் அதனை  காலம் முழுவதும் தாங்கும் வலிதான்
கொடுமையிலும், கொடுமை!
குடும்பத்தின் ஆணி வேர் அவன்.
= = = = = = = =
வீரா

Wednesday, 20 November 2019

தொலையும் தொடர்பு

தொலையும் தொடர்பு:
= = = = = = = = = = = = = = =
கூட்டுக் கூடும்பம் உறவை வளர்த்தது,
நல்ல சந்ததியை கொடுத்தது,
மனிதர் மாண்பையும், பாரம்பரியத்தையும் மீட்டது,

நவநாகரிகத்தால் குடும்பங்கள் சிதையுண்டது,
சின்ன வீடாய் மாறியது,
உறவுகள் சிதைந்தது,
தொடு திரை வந்தது,
உறவுகளை வெட்டியது,

காணொளியில் முகம் பார்த்து பேசியதாலே,
அருகில் இருந்தும் நேரிலே தொடர்புகள் தொலைந்தது,
சமுக வலைத்தள விசாரிப்புகள்,
உறவுகளை அறுத்தெரிந்தது,

எந்நேரமும் தொடு திரையில் மனம் வீழ்ந்தது,
உறவுகளின் நட்போ சிதைந்தது,
தனிமை வாழ்க்கையாய் மாறியது,
உடல் நலமும் குன்றியது,

தொலையும் தொடர்பால் வாழ்க்கை நெறியே மாறியது,
வாழ்க்கை பயணத்திற்கு உறவுகள் முக்கியம்,
அதனை மீட்டெடுப்பதும் அவசியம்!
= = = = = = = = = = = =
வீரா

உழைத்தால் தானே சோறு

உழைத்தால் தானே சோறு :
=======================
சோம்பேறித் தனத்தை அகற்றிடுவோம், /
மாடுப் போல உழைத்திடுவோம்,/
உழைத்தால் தானே சோறும் மிஞ்சிடும், /
ஊதியமும் உயர்வும் கிடைத்திடும்,/
மாட்டின் அன்பில் கரைப் படிந்திடாது, /
அதன் உழைப்பில் களவும் இருந்திடாது,/
குடும்பத்திற்கு ஒரு மாடு போதுமே, /
வறுமை அங்கே அகன்று
நல் வாழ்வும் பண்பும் சிறந்திடுமே, /
= = = = = = = = = = = =
வீரா

மலையை குடைந்து

மலையைக் குடைந்து இயற்கையை அழித்தோம்,/
சூறாவளியால் வாழ்வை இழந்தோம், /
செடி, கொடி, மரத்தை அழித்தோம், /
மழையை இழந்தோம், வறட்சியில்  வாடுகின்றோம்,/

வனத்தை அழித்து உயிர்களை கொன்றோம், /
காற்று மாசு எனக் கூவுகின்றோம்,/
உயிர்க் கோளத்தை அழித்து உலோகத்தைத் தேடி அலைகின்றோம்,/
பூகம்பத்தால் இருப்பிடத்தை இழக்கின்றோம்,/
= = = = = = = =
வீரா

வானம் உதிர்க்கும் மீன்கள்

வானம் உதிர்க்கும் மீன்கள்
= = = = = = = = = = = = = = = =
ஆயிரம் மர்மங்கள் நீடிக்கும் வானிலே
வண்ண வண்ண மீன்களாய் உதிர்கிறது,
எரிக்கற்கள் ஒளியை கக்கிடும்,
சந்திரன் விண்ணில் மலர்ந்திடும் நிகழ்ச்சி ஏராளம்,
தினம் தினம் திருவிழாக்கோளம் வானிலே,
திடீரென இருண்டு, இடி மின்னலாய்
சோகத்தில் வானம் அழுதிடும் போது
பூமி குளிர்கிறது,
பசுமை பூக்கிறது!
= = = = = = = = = =
வீரா

முதலும் முடிவும் நீ

முதலும் முடிவும் நீ
= = = = = = = = = = =
உன் இதயத்தில்
என்னை சிறைப்பிடித்த நாள் முதல் நான் நீயானேன்,
முதலும் முடிவுமானேன்!
=========
வீரா

Tuesday, 19 November 2019

சிப்பிக்குள் முத்து

சிப்பிக்குள் முத்து
= = = = = = = = = = = =
சிப்பிக்குள் முத்து மதிப்பு கூடும்,
சிந்தனையின் உச்சம் சிகரம் தொடும்,
சினம் கொண்ட மனதிலும் பாசத்தை கொட்டும்,
சின்ன உருவத்தில் பெரிய மனமிருக்கும்.

வைரம் சிறியது, மதிப்போ பெரியது,
உயர்ந்தோர் தாழ்ந்தோர் பாகுபாடு ஏன்
பணக்காரனிடம் குணமும் இருக்காது,
ஏழையிடம்  பணமும் கொட்டாது,

அதர்மத்தில் தர்மம் வென்றும் காட்டும்,
ஆத்திரத்தில் புத்தியும் மட்டுப்படும்,
தலைக்கணத்தால் ஏமாற்றம் மிஞ்சும்,
தெனாவட்டு பிறந்தால் மனிதம் மறையும்,

சிப்பிக்குள் மறைந்திருந்த முத்தாய் இருந்து போதும்,
மாணிக்கமாய் ஒளி வீசிட எழுந்து வா,
சந்திரனாய் பிரகாசிக்கும் வெள்ளியாய் புறப்படு,
பொன்னாய் மின்னும் புன்னகையை வீசு,
சிங்கமும் உன் முன் அடங்கி போகும்,
சிகரமும் தலைமையேற்க உன்னை அழைக்கும் .

ஓவியம்

ஓவியம்
= = = = = = =
ஓவியம் காலத்தின் காவியம் - அது /
சந்ததிகளுக்கு சாட்சியாகும் காட்சிப் படம் /
அழிந்ததை நினைவுப் படுத்தும் வசந்தம் /
காலத்தால் அழியாத முத்திரைத் தடயம் /
= = = = = = = = =
வீரா

Monday, 18 November 2019

அடிக்கும் அலையே நம் தோழன் (கிராமியம்)

அடிக்கும் அலையே நம் தோழன்
= = = = = = = = = = = = = = = = = = = =
அடிக்கும் அலையே நம் தோழன்,
எதிர்க்கும் காற்றே நம் நண்பன்
புயலும், மழையும் நமக்கு உறவுகள்,
எதிர் நீச்சலே நம் வாழ்க்கை,

ஐலசா போட்டு படகில் செல்லும்
மீனவன் வாழ்க்கை கேள்விக் குறியோ, கொடூர திமிங்கிலமும்,
ஆளை விழுங்கும் சுராவும்
மீனவனுக்கு நண்பனாம்,
மனித இனமே அவனுக்கு எதிரியாம்,

அள்ளிக் கொடுக்கும் கடல் தாயி
வாரி அணைக்கிறாள்,
சூறாவளிக் காற்றும்,
சுழன்றடிக்கும் அலையும்
தெறித்து ஓடுகிறது,

எல்லைத் தாண்டியது குற்றமென
சுட்டுத் தள்ளுகிறான்,
மீனவன் செத்து மிதக்கிறான்,
சீற்றம் கொண்ட கடலும்,
சினம் கொண்ட இயற்கையும் ,
மீனவனுக்கு தாய் மடியாம்,
மனிதனுக்கு மனிதன் வீழ்த்த துடிக்கிறான்,
மனிதம் மாயையில் வீழ்ந்தது.

இயற்கைக் கூட உதவிடும்,
மனித மிருகமோ கொன்றுவிடும்,
நேயத்தை தின்றுவிடும்,
அடிக்கும் அலையாய் மாறிவிடு,
உற்ற தோழனாய் உதவிடு!
- - - - - - - - - - - _
வீரா

செக்கிழுத்த செம்மல்

செக்கிழுத்த செம்மல்
= = = = = = = = = = = = =
அடிமைப்பட்ட இந்தியா, /
செக்கிழுத்த செம்மலால் நிமிர்ந்தெழுந்தது,/
வெள்ளையன் மனதைக் கொதிக்கச் செய்தது,/
கப்பல் வைத்திருந்த செல்வந்தனால்  அலற வைத்தது./

அந்நியனை விரட்டச் செய்தது,/
சுதேசி இயக்கத்தை வளரச் செய்தது,/
தமிழனை தலை நிமிர வைத்தது, /
தூத்துக்குடியை ஸ்தம்பிக்கச் செய்தது, /

அவரின் வீரமும், விவேகமும், /
தேசத்தந்தையை திரும்பி பார்க்க வைத்தது, /
சுதந்திரத் தீயைக் கொளுத்திப் போட்டது, /
வஞ்சகம் நிலைக்குலையச் செய்தது /

பெரும் செல்வந்தனை செக்கிழுக்க வைத்தது, /
வறுமையோ பாதாளத்தில் தள்ளியது, /
அவரின் தாகம் அவர் இறந்தே தீர்ந்தது ./
பாரதத் தாய் மலர்ந்து தேசிய கொடியால் அவரை போர்த்தியதால் நாடே மகிழ்ந்தது./
= = = = = = = = = = = = = = =
வீரா

அகிலம்

அகிலம்
= = = = = = =
அகிலம் போற்றும் குலத் தெய்வம் /
நம் பண்பாட்டின் வழிப்பாட்டுத் தெய்வம் /
முன்னோர்களை நினைவு கூறும் பரமபதம்/
அதுவே ஒவ்வொருவரின் இறைப்பதம் /
-------------
வீரா

வான் பயணம்

வான் பயணம்
= = = = = = = = =
நடைப் பயணம் முதல் பயணம்/
விலங்கினங்கள் நடையைக் குறைத்தது, /
மாட்டு வண்டிகள் கால் வலியைப் போக்கியது, /
மிதிவண்டிகள் மிதிக்க வைத்தது/
கடலிலே கப்பல்கள் மிதந்துச் சென்றது /
மகிழுந்துகள் மகிழச் செய்தது /
தொடர் வண்டி பயணம் வாழ்க்கையை வாழச் செய்தது /
வான் பயணம் காலத்தை மிச்சப்படுத்தியது /
------------------------
வீரா

அன்பே சுவாசம்

அன்பே சுவாசம் :
=============
அன்னை என்ற மூன்றெழுத்தில்
அன்பு என்ற மூச்சிறுக்கும்,
அதிலே குழந்தையின் சுவாசம் இருக்கும்,
அன்பின் பிறப்பிடம்,
அம்மாவின் உறவாக இருக்கும்

அன்பு பிறழும் போது அடிதடி பிறக்கும்,
ஆத்திரம் பெருகும் போது ஆணவம் தாண்டவமாடும்,
அறிவு கலங்கி போகும்,
மனிதம் மறைந்து போகும்,

அன்பு சுவாசத்தில் கலந்தால் போதும்,
அறிவு உலகை ஆளும் ,
எதிரிகளை எளிதில் கையாளும்,
துரோகிகளை காணாமல் செய்யும்

இந்த மாயம் செய்யும் அன்பை
பிறக்க செய்யும் உறவை
ஆத்திரத்தால் இழந்திட வேண்டாம்,
வன் சொற்களால் காயத்தை ஏற்படுத்திட வேண்டாம்,

கொடிய மிருகமும் அன்பினால் அடி பணியும்,
எளிய விலங்கினமும் முத்தமிடும்,
அன்பிற்கு அடிபணியாத உயிர்கள் இல்லை,
அதன் சுவாசம் பறவாத இடமும் இல்லை!
= = = = = = = =
வீரா

மீண்டும்

மீண்டும் :
========
மீண்டும் முதற்சொல் கவிதை முளைத்தது. /
கவிஞர்கள் மத்தியில் மகிழ்ச்சி பிறந்தது, /
நிலாமுற்றத்தில் கவிதைகள் பல குவிந்தது,/
திறமைக்கு விருதும் பாராட்டும் கிடைக்கின்றது. /
= = = = = = = =

மீண்டும் எழுந்தேன், விதையாய் முளைத்தேன், /
முளைக்கும் போதே நசுக்கிடும் கூட்டம் /
மீளாத் துயரத்தை மீண்டும் விட்டேன், /
துரோகத்தை மட்டும் வேர் அறுப்பேன்./

Sunday, 17 November 2019

நவீன உலகில் உறவுகள்

நவீன உலகில் உறவுகள் :
=============
கூட்டுக் குடும்பம் மறைந்தது, /
உறவுகள் சிதைந்தது, /
அன்பு, பாசம் கேளியானது, /
தொடுதிரை கைப்பேசி நவீன உறவானது /
= = = = = = = = =
வீரா

உயிரே உனக்காக ஒரு கவிதை

உயிரே உனக்காக ஒரு கவிதை
= = = = = = = = = = = = = = = = = =
உயிரே என்னை ஆட்கொண்ட நிலவே,
மலருடன், நிலவுடன், நதியுடன், மானுடன்,
தினம் தினம் அழகியலுடன் ஒப்பிடுகிறேன்,
கவிதையாய் வடிக்கின்றேன்.

உன் அழகுக்கு, ஒப்பீடுகள் கிடைக்காமல்,
வார்த்தைகள் சேராமல் திணறுகிறேன்.
கடவுளை கூட கண்டு விடலாம்,
உன் அழகை முழுமையாக ஆராதிக்க முடியாமல் அல்லல்படுகிறேன்.

உன்னில் நான் பதிந்தும்,
என்னுள் நீ கடந்தும்,
சகிக்காமல் உன்னை வர்ணிக்க
என் காதல் வளர்கிறது!

உனக்காக எழுதிய கவிதைகள்
காகித மடிப்பில் கரைகிறது,
என்னுள் நிறையவில்லை,
உனக்காக ஒரு கவிதை வடிக்கிறேன்,
மனம் மகிழவில்லை.

உன் நிழல் படமே கவிதையாக,
என் வார்த்தைகளும், வர்ணனைகளும்,
ஒப்பீடுகளும் நிஜமாகவில்லை.
உன்னை பார்த்து கொண்டேயிருந்தால் கவிதையாகிவிடுகிறாய்!
- - - - - - - - - - - - - - - - - -
வீரா

சின்னக் கண்ணுப் பொன்னுத்தாயி

சின்னக் கண்ணுப்
பொன்னுத்தாயி

கலைமணியே நீ பிறந்த நேரம்
நான் மலடி பட்டம் இழந்தேன் கண்ணே
முழு பெண்ணாய் உணர வைத்து
மகிழ்ச்சியில் ஆழ்த்திய என் சின்னக் கண்ணே

ஆராரோ என்னை பாட வைத்த
ஆரிய மாதாவே,
ஆரிராரோ என்று என்னை தூங்க வைத்த அம்மணியே

பொன்னுத்தாயி பெத்த சின்னக் கண்ணு நீயே
அடம் பிடிச்சி அழுதா,
அப்பன் வைவாறு தாயே,

நீ களுக்கென்று சிரிச்சாக்கா
பச்சரிசி தெறித்து விழும்,
கண்ணீர் விட்டு அழுதாக்க
முத்து மணியாய் தண்ணீர் விழும்,

ஓடி ஆடி விளையாடும் அழகோ
பச்சம் பசும் சோலையும் தோற்கும்,
நீ புத்தம் புது துணி போட்டா
அந்த அம்மனும், உன்னை தூக்கி வச்சு கொஞ்சும்!

முத்து முத்தா பேசும்
மழலை கண்ணே,
உன் பேச்சில்
அந்த  கானம் பாடும் குயிலின் இசையே தோற்கும்.

அந்த கன்றின் எக்கரணமும்,
மான் குட்டியின் துள்ளலும்,
சின்னக் கண்ணு நீ போடும் ஆட்டத்தில்
மறைந்துதானே போகும்.

உன் பிறப்பால் நான் மகிழ்ந்தேன்,
உன் செயலால் நான் சிலையானேன்,
என்னை ஆட்டுவிக்கும் என் கண்ணே
உன் வாழ்வில் தானே என் மூச்சிருக்கும்.
==============
வீரா

Saturday, 16 November 2019

மெல்லினமே நீயும் வல்லினமாய் மாறிவிடு

மெல்லினமே நீயும் வல்லினமாய் மாறிவிடு
= = = = = = = = = = = = =
அடுப்பூதி வெளியில் வந்தாய்.
குடும்பம் உன்னை ஏற்க மறுத்தது,
போராடி சாதனைகள் படைத்தாய்,
உலகமே எதிர்த்து நின்றது!

பெண்ணாய் பிறந்ததாலே
இன்னல்கள் பல பிறந்தது,
அழகும், உடலும்
காமுகர்களின் பசிக்கு இரையாகிறது!

பெற்றெடுத்த தகப்பனால் ஒரு பக்கம்,
உடன் பிறந்தவனால் மறு பக்கம்,
ஆண் வர்க்கத்தின் பார்வையே உன் பக்கம்,
எந்த பக்கத்திலும் காமத்தின் கொடூரம்
அது பின் தொடர்ந்து படரும்!

நீ மெல்லினமாய் இருந்தது போதும்,
வல்லினமாய் மாறிட வேண்டும்,
கயவர்களின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும்,
விதியை மதியால் வென்றிட வேண்டும்.

சட்டம் உன் பக்கம் இருக்க
நீ சரித்திரம் படைத்திட வேண்டும்.
சாதிக்க பெண்மை தடையில்லை
என்பதை நீ உணர்ந்திட வேண்டும்.

நீ கடக்கும் பாதை கரடு முரடு,
அதை கடக்கும்  உன் திறமையால்,
இச்சமுகம் உன்னை கடந்து வரும்,
அதற்கு நீ தான் கோடு போட வேண்டும்!
- - - - - - - - - - - - - - -
வீரா