Thursday, 20 December 2018

வரலாற்றில் வன்னியர் மகா வம்சம்

இறைவனின்
.......................
வரலாற்றில் வன்னியர் மகா வம்சம்
...............................................................
                    அரசியல்
                      *********
கானூர் சாமிக்கண்ணு படையாச்சி
                       .................                         
      தொடர் - 2
1954 இல் திரு. எஸ். எஸ். ராமசாமி படையாச்சியார் காங்கிரசில் ஐக்கியமானார். எனவே,  கானூரார் காங்கிரஸில் இணைந்தார்.
பின்னர் ராமசாமி படையாச்சியார் காங்கிரசை விட்டு விலகி தனிக் கட்சி தொடங்கிய போதும்
சாமிக்கண்ணு படையாச்சி காங்கிரஸிலிருந்து வராமல் அங்கேயே தொடர்ந்து இருந்தார்.

1957 முதல் 1962 முடிய புவனகிரியிலிருந்து சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான குடிநீர், பள்ளிக்கூடம், பாலம் அமைத்தல் ,சாலைகள் அமைத்தல், இலவச கல்வி போன்ற விஷயங்கள் பற்றியே இருந்ததால் மக்கள் நல் மதிப்பை பெற்றார்.
1955 இல் தென்னார்க்காடு மாவ‌ட்ட ஜில்லா போர்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் சகல அதிகாரமும் படைத்த மாவட்ட ஜில்லா போர்டு தலைவராக இவர் இருந்ததால்... ஒரு தலைவர் எப்படி செயல்பட வேண்டும் என்று இந்தியாவிற்கே எடுத்துக் காட்டாக இருந்தார்.
அனைத்து கிராமங்களுக்கும் சாலைகள், குடிநீர் வசதி, போக்குவரத்து, போன்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.

இவர் காலத்தில் மரக்காணம்,
மருங்கூர் உள்பட 143 பள்ளிகளை கட்டினார்.
அந்த மாவ‌ட்ட எம். எல் ஏக்கள்,
எம். பி க்கள், அமைச்சர்கள் எல்லோரும் முதல்அமைச்சர்
திரு, காமராஜர் அவர்களிடம் சென்று எங்களை எந்த அதிகாரிகளும் மதிப்பது இல்லை. எல்லோரும் கானூர் சாமிக்கண்ணு படையாச்சிக்கு வேலை செய்யவே நேரமில்லை என்று கூறுவதாகவும் புலம்பி ஒப்பாரி வைத்து அழுவதை தாங்க முடியாம‌ல்
திரு, காமராஜ் அவர்கள் ஜில்லா போர்டு தலைவரின் அதிகாரத்தை குறைத்து மாவ‌ட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை முதல் முதலில் இயற்றினார்.

அவ‌ரது காலம் தென்னார்க்காடு மாவட்டத்தின் மறுமலர்ச்சிக் காலம் என்பது ஒரு சத்திரிய வரலாறு.

சாமிக்கண்ணு படையாச்சி பற்றிய சில சுவையான தகவல்கள்.
.............................................................
சிதம்பரம் பக்கத்தில் உள்ள முத்தரசன் பேட்டை என்ற கிராமத்திற்கு இவர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, அந்த கிராம மக்கள் பள்ளிக்கூடம் வேண்டும் என்று கேட்க உடனடியாக அங்கிருந்த ஒரு மாட்டுக்கொட்டையை அதன் உரிமையாளரிடம் கேட்டு பெற்று அவர் அனுமதித்த உடனே
டேய் இங்குள்ள எஸ். எஸ். எல். சி படிச்ச பசங்க எல்லோரும் வாங்க அந்த இடத்தை சுத்தம் செய்யுங்கள் அனுமதி வாங்கி வருகிறேன் என்று கூறி அனுமதி வாங்கி உருவானதுதான் முத்தரசன்பேட்டை பள்ளி.
அதேபோல பண்ருட்டி தாலுக்கா மருங்கூர் என்ற கிராமத்தில்
ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது ஊர்க்காரர்கள் பிள்ளைகள் படிக்க 20 கிலோ மீட்டார் துரத்தில் உள்ள பண்ருட்டிக்கு செல்லும் நிலை உள்ளது. என்று கூறினார்கள்.
உடனே அந்த ஊர் மணியக்காரரைப் ( முன்னாள்
தி மு க சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர், நந்தகோபால கிருஷ்ணனின் தந்தை குமாரசாமி படையாச்சிதான் மணியம். நாட்டாண்மை, பெரும் பணக்காரர்) பார்த்து கானூரார் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்க குறைந்தது 4 ஏக்கர் நிலம் வேண்டும். என்ன செய்யலாம் என்று கேட்க
உடனே குமாரசாமி படையாச்சி தனது 5 ஏக்கர் முந்திரி நிலத்தை பள்ளிக்கூடம் கட்ட நன்கோடையாக கொடுத்தார். நம்ப முடியவில்லையா..?
அதுதான் உண்மை.

பதவி ஏதும் இல்லாமல் இருந்த நேரத்தில் சில பள்ளிகளுக்கு அனுமதி வேண்டி அவரை அணுகினர். அது சம்மந்தமாக
சாமிக்கண்ணு படையாச்சியார் அப்போது முதல்வராக இருந்த
திரு, காமராஜர் அவர்களை சந்திக்க சென்றார் , அப்போது இவர் காமராஜ் அவ‌ர்களை பார்த்து
என்ன நாடாரே எப்படி இருக்கீங்க என்று கேட்க..!
காமராஜரும் நல்லா இருக்கேன் படையாச்சி நீங்க எப்படி இருக்கீங்க? என்ன திடீர் என்று வந்துள்ளீர்கள் என்றார்.
ஒன்றும் இல்லை இரண்டு மூன்று பள்ளிக்கு அனுமதி வேண்டும், எல்லோரும் உங்களை பார்க்க செல்கிறார்கள் என்றார்.
பின்னே நீர் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட மாட்டீரே? உம்ம இஷ்டத்திற்கு எல்லாம் செய்வதாக அதிகாரிகள் சொல்றாங்க என்ன பன்ன? என்றார் காமராஜர்.
உடன சாமிக்கண்ணு படையாச்சி எவன் சொன்னான் என் இஷ்டத்திற்கு நான்
செயல்படுகிறேன் என்று,
மக்கள் இஷ்டத்திற்குத்தான்
நான் செயல் படுகிறேன். மக்களுக்குத்தான் சட்டம், சட்டத்திற்காக மக்கள் இல்லை. சட்டம், கிட்டம் என்று பேசினால் சட்டையை கழட்டி விட்டு வாசலில் உட்கார்ந்து விடுவேன். என்று சட்டையை கழற்ற முயற்சி செய்ய
உடனே காமராஜர் யோவ் இருய்யா சட்டையெல்லாம் கழற்ற வேண்டாம் உன்னைப் பற்றி எனக்கு தெரியாதா.? 4, 5 நாளில் அனுமதி வரும் பத்திரமாக ஊருக்கு போய்யா என்று அனுப்பி வைத்தார். இப்படி நிறைய கூறலாம்.

இறுதியாக 1980 ஆரம்பத்தில் மாவ‌ட்ட ஆட்சியாளராக இருந்தவர் திருமதி, சந்திரலேகா அப்போது படையாச்சிக்கு வயது 89.
லெவி தரவில்லை என்று அவ‌ரது குடவனுக்கு சென்று சீல் வைத்து விட்டார் ஆட்சியர் சந்திரலேகா.

கேள்விப்பட்ட சாமிக்கண்ணு படையாச்சியார் சீலை உடைத்து விட்டு, ஆட்சியர் அலுவலகம் சென்று எனது இடத்தில் வந்தே சீல் வைக்கிறாயா என்று கேட்டு அங்கிருந்த நாற்காலியை எட்டி உதைத்து விட்டு சென்று
லெவி விலைக்கே தனது நெல்லை கானூர் மக்களுக்கே வாங்கினாராம்.
எப்படி இருந்தாலும் ஆட்டுக்கு
தோற்க்காது கிழப்புலி.
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதில்லை என்ற கண்ணதாசனின் பாடல்
வரிகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர் கானூர். சாமிக்கண்ணு படையாச்சியார்.
                                        
................................................................

Wednesday, 19 December 2018

தமிழும் நானும்

தமிழும் நானும்
- - - - - - - - - - - - - - - .
அம்மா என்று அகரத்தில் தொடங்கியது
என் முதல் வார்த்தை,
அது தமிழென்று தெரியாது?
நான் குழந்தையாய் இருக்கையிலே,

அனைத்து உறவுகளின் பெயர்களும்
மழலை சொற்களாய் பேசினேன்,
கொச்சையாகினும் மகிழ்ந்தால் என் அன்னை,
அதனை திருத்திக் கூறினேன்
உச்சி முகர்ந்தாள்.

மூன்றாம் வகுப்பிலே
முதல் வாழ்த்துப் பாடலை
மனப்பாடம் செய்திட்டேன்,
தமிழை என்னுள் செலுத்திட்டேன்
ஆசிரியர் அன்பாய் அரவணைத்தார்,

தமிழை பேசுகையில் பேராணந்தம்,
அதனை படிக்கையில் ஒரு பரம சுகம்
உணரும் போது மயிர் கூச்சலிடும்,
ஏதோ ஒரு வேட்கை உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ,

தமிழை நான் பேசுவதால் உயர்ந்ததா?
இல்லை, இல்லை,
அதனை வாசிக்கும் போது தான்
தாழ்ந்து கிடந்த
நான் உயர்ந்து போனேன்.

என் தாயை பிரிக்கலாம்,
என் உறவுகளை பிரிக்கலாம்,
என் சுக, துக்கங்களை பறிக்கலாம்,
ஏய்! காலனே
என் உயிர் தமிழை பிரிக்கத் தான் முடியுமோ?
உயிரை பிரித்தாலும்
நான் உள்வாங்கி வெளியிட்ட
என் சுவாசம்
என் கவியை, என் தமிழை
உன்னால் பிரிக்க முடியாது.

நகமும் சதையுமாய்
நானும் என் தமிழும்
உறவாடி வருகிறோம்,
எந்த மொழியாலும்
என்னை பிரிக்க முடியாது,
ஏனென்றால்
தமிழை தவிர வோறொன்றும் எமக்கு அறியாது!

தமிழே மூச்சென்று வாழ்கிறேன்,
என் பெயரை போற்றும் ஒரு நாள் தமிழகம்
அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்,
தமிழ்ப் பாலை குடித்துவிட்டு உயிர் வாழ்கிறேன்,

என் உயிரை காலன் எடுத்தாலும்,
என் உடலை இந்த மண் தின்றாலும்
என் கவியை இந்த தமிழ் சுமக்கும்,
அன்றே என் ஆத்மா சாந்தியடையும்.

- - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா

Sunday, 9 December 2018

மண்பாண்டம் விற்பனை

 

மண்பானை விற்பனை அதிகரிப்பு

February 27, 2017ஜாகர்

வெயில் காலம் வருவதையொட்டி கோவையில் மண்பானை விற்பனை அதிகரித்துக் காணப்படுகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்வதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குளிர்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளன. தற்போது இரவு நேரங்களில் மிக குளிராகவும் காலை நேரங்களில் மிக வெப்பமாகவும் காணப்படுகிறது.

வெயில் காலம் நெருங்கி வருவதால் மக்கள் வெயிலிலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இயற்கையான முறையில் குளிர்ச்சி தரக்கூடிய மண்பானைகளை அதிகம் உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர். மண்பானைகளில் தண்ணீர் ஊற்றி, குடித்தால் உடலுக்குக் குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். இதனால், கோவை மாவட்டத்தில் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டபாளையம் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மண்பாண்ட விற்பனை மையங்கள் உள்ளன. இங்கு செம்மண், களிமண், வண்டல் மண் போன்ற மண் வகைகளால் செய்யக்கூடிய பல வகையான மண்பாண்டங்கள் விற்பனைக்கு உள்ளன. தற்போது வெயில் காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டதால் தண்ணீர் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மண்பானைகள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஐந்து வகை அளவில் இந்த மண்பானைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விலை 40 முதல் 15௦ வரை ஆகும். கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு விலை சற்று உயர்வாக காணப்பட்டாலும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்வதாக மண்பானை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மண்பானை விற்பனையாளர் செல்வராஜ் கூறுகையில், “மண் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. எனவே, மண்பானை விலை சற்று உயர்ந்துள்ளது. எனினும், மக்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு வாங்கி செல்கின்றனர். மக்களிடையே இயற்கை முறைகள் குறித்த விழிப்புணர்வு அதிக அளவு ஏற்பட்டுவிட்ட காரணத்தினால் மண்பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது” என்றார்.

மண்பானைகளில் சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெறும் எனவும் உணவின் சுவையும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பண்டைய காலங்களில் மண்பானைகளில் சமையல் செய்து சாப்பிட்டும், மண்பானைகளில் தண்ணீர் அருந்தியும் வந்தனர். இதனால் மக்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருந்துவந்தனர்.

ஆனால், நாகரிக வளர்ச்சி காரணமாக அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களில் சமையல் செய்து வருவதால் உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாகவே மண்பானை விற்பனை தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

இது குறித்து முருகன் கூறுகையில்,

“கடந்த மூன்று வருடங்களாக மண்பானைகளை உபயோகித்து வருகின்றேன். வருடம் ஒரு முறை பழைய மண்பானைகளை மாற்றி புதிய மண்பானைகளை வாங்கிவிடுவேன். அதில் தண்ணீரைச் சேமித்து வைத்து, பருகுவதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மேலும் அதில் சமைத்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது. வெயில் காலம் தொடங்கிவிட்டது. எனவே, முன்கூட்டியே மண்பானைகளை வாங்கி வைத்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன்” என்றார்.மண்பானைகள் விற்பனை அதிகரித்து காணப்படுவதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Saturday, 8 December 2018

ஆண்கள் _ பெண்கள் அறிந்து கொள்ள. வேண்டியது

*ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது*
A
1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .

2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது .
உடனே வெளியே எரிந்து விட வேண்டும் .

3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது

4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது .

5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது .

6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது

7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .

8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது .

9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது .

*பெண்கள்_தெரிந்து_கொள்ள_வேண்டியது …*

1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிàaqந்து கொள்ள வேண்டும்.

2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)

3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .

4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.

5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .

7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது

8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது,அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும் .

9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது .

10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது

11. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

ஆன்மீக பதிவில்– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Friday, 7 December 2018

வெற்றிலை போடுவதின் மகத்துவம்

*அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு*

* வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு
போடுவது மட்டுமே*

அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில் இருந்த, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது, என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....!

Note:ஒருத்தருக்குமட்டும் பகிராமல் பலரும் பயன் பெரும் வண்ணம் பகிருங்கள்.டேட்டா இல்லை கமியா டேட்டா இருக்குனுட்டு பகிராமல் இருந்துவிடாதீர்கள்.

            *நன்றி*

Friday, 30 November 2018

விருத்தகிரீஸ்வரர் கோவில்

அருள்மிகு விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில், விருத்தாசலம்.

ஆராய்சியாளர்களால்
3 1/2 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என கணிக்கப்பட்ட தலம்.
3000 ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தை தலவிருட்சமாக கொண்ட தலம்.

பிரளய காலத்திலும் அழியாத தலம்.

நடுநாட்டின் 22 சிவ திருத்தலங்களில் 9வது தலம்.

சைவ சமயத்தின் 28 ஆகமங்களுக்கும் 28 லிங்கங்களை முருகபெருமானே நிலை நிறுத்தியதாக அறியப்படும் ஒரே தவ தலம்.

இல்லற வாழ்விலும் ஈசனை இடைவிடாது வழி பட்ட நாதசர்மாவும் அனவர்த்தியும் சிவகணங்களாகவே ஆன தலம்.

சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை வேண்டி பெற்ற பன்னீராயிரம் பொற்காசுகளை மணிமுத்தாற்றில் இட்ட தலம். பின்னர், திருஆரூர் கமலாயகுளத்தில் எடுத்தார்.

உலக படைப்பில் சிவபெருமானே மலையாக தோன்றியதால் பழமலைநாதர் என பெயர் பெற்ற தலம்.

பஞ்சாட்சர ஐந்தெழுத்து மந்திரத்தின்படி இத்திருகோவிலில் அனைத்தும் ஐந்து ஐந்தாக இருப்பது வேறெங்கும் காண இயலாத சிறப்பாகும்.

பதிவின் முடிவில் நமக்கு மிகவும் தேவையான ஐந்தும் உள்ளது ஐயா.....

ஐந்து மூர்த்தங்கள்: 
விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர்

ஈசனின் ஐந்து திருநாமங்கள்: விருத்தகிரீஸ்வரர்
பழமலைநாதர்
விருத்தாசலேஸ்வரர்
முதுகுன்றீஸ்வரர்
விருத்தகிரிநாதர்

ஐந்து விநாயகர்கள்:
ஆழத்து விநாயகர்
மாற்றுரைத்த விநாயகர் முப்பிள்ளையார்
தசபுஜ கணபதி
வல்லப கணபதி

இறைவனை தரிசனம் கண்ட ஐவர்:
உரோமச முனிவர்
விபசித்து முனிவர்
குமார தேவர்
நாத சர்மா
அனவர்த்தினி

ஐந்து கோபுரங்கள்:
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம்

ஐந்து பிரகாரங்கள்(திருச்சுற்று):
தேரோடும் திருச்சுற்று
கைலாய திருச்சுற்று
வன்னியடித் திருச்சுற்று
அறுபத்து மூவர் திருச்சுற்று பஞ்சவர்ணத் திருச்சுற்று

ஐந்து நந்திகள்: 
இந்திரநந்தி
வேதநந்தி
ஆத்மநந்தி
மால்விடைநந்தி
தர்மநந்தி

ஐந்து உள் மண்டபங்கள்:
அர்த்த மண்டபம்
இடைகழி மண்டபம்
தபன மண்டபம்
மகா மண்டபம்
இசை மண்டபம்.

ஐந்து வெளி மண்டபங்கள்: 
இருபது கால் மண்டபம் தீபாராதனை மண்டபம் நூற்றுக்கால் மண்டபம்
விபசித்து மண்டபம்
சித்திர மண்டபம்

ஐந்து வழிபாடுகள்: 
திருவனந்தல்
காலசந்தி
உச்சிகாலம்
சாயரட்சை
அர்த்த ஜாமம்

ஐந்து திருவிழாக்கள்:
வைகாசி வசந்த உற்சவம்
ஆனி திருமஞ்சனம்
ஆடிப்பூரம் திருக்கல்யாணம்
மார்கழி திருவாதிரை
மாசிமகம் 10நாள் பிரம்மோற்ஸவம்.

ஐந்து தேர்கள்:
விநாயகர் தேர்
முருகன் தேர்
பழமலை நாதர் தேர்
பெரியநாயகி தேர்
சண்டிகேஸ்வரர் தேர்

தலத்தின் ஐந்து பெயர்கள்: திருமுதுகுன்றம்
விருத்தகாசி
விருத்தாசலம்
நெற்குப்பை
முதுகிரி

பெருமானின் பம்பர் பரிசு:

இத்தலத்தில் பிறந்தால்,
வாழ்ந்தால், வழிபட்டால்,
நினைத்தால், இறந்தால் என இந்த ஐந்தில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட நமக்கு முக்தி நிச்சயமாம்.

எம்பெருமான் அருளால் தங்களை இத்தலத்தை நினைக்க வைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
பெரும் பேறு பெற்றீர்கள் நண்பர்களே !

கடைசியாக.......
இத்தலத்தை தரிசித்ததால் அடியேனுக்கு ஏதேனும் பலன் இருப்பின் அவை அனைத்தையும்  இப்பதிவை  படித்தோருக்கு பழமலைநாதர் மீது ஆணையாக மனதார அளிக்கிறேன்.

திருச்சிற்றம்பலம்.

Friday, 23 November 2018

முதனை கோவில் வரலாறு


#முதனைகிராமம் #கார்த்திகைதீபம்
திருஅண்ணாமலை கார்த்திகைதீப விழா நடைபெற்ற போது ,தீபத்திற்காக முதன்முதலாக நெய் வழங்கியது இவ்வூர் இதன் காரணமாகவே இவ்வூரின் பெயர் முதல்நெய் எனப்பெற்றது,இது மறுவி முதநெய் என அழைக்கப்பெற்று ,தற்போது #முதனை என அழைக்கப்படுகிறது.
அருள்மிகு முதுகுன்றீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் : முதுகுன்றீஸ்வரர்
உற்சவர் : பழமலை நாதர், பெரிய நாயகி
அம்மன் : பெரியநாயகி
தல விருட்சம் : கொன்றை மரம்
தீர்த்தம் : நன்னீர் குளம்
ஆகமம்/பூஜை : காமிகம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : முதல்நெய்
ஊர் : முதனை
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா:
    
  சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், தை பிரம்மோற்சவம் (வேல்முழுகுதல்) மாசி மகம், சோமவாரம், பிரதோஷம். 
  
    
திறக்கும் நேரம்:
    
  காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
    
முகவரி:
    
  அருள்மிகு முதுகுன்றீஸ்வரர் திருக்கோயில் முதனை 607 804 விருத்தாசலம் அருகில், கடலூர் மாவட்டம். 
    
பொது தகவல்:
    
  ஊரின் வடமேற்கு திசையில், ஏரியின் ஓரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலினுள் செல்ல பிரதான வாயில் ஒன்று மட்டுமே உள்ளது. சுற்றுச் சுவர் உள்ளது. நுழைவு வாயிலின் வலதுபுறம் மூஞ்சுறு வாகனத்துடன் விநாயகர், இடதுபுறம் வள்ளி, தெய்வாணை, முருகர் சிலைகள் மாட அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. விநாயக பெருமானை வழிபட்டு உள்ளே சென்றால் உடன் காட்சி கொடுப்பது பலிபீடம். அதனையடுத்து, கொடிமரம் அதிகார நந்தி, முதுகுன்றீஸ்வரர் அர்த்த மண்டபம், மூலஸ்தானம். மூலஸ்தானத்தில் சதாசிவ வடிவில் முதுகுன்றீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பீடத்தின் மேலிருக்கும் ஆவுடையாருடன் சேர்ந்து மூலஸ்தான விக்ரகம் இரண்டரை அடி உயரமுள்ளது. அர்த்த மண்டபத்தின் வாயிலின் மேல் கெஜலட்சுமி சிலை, அர்த்த மண்டபம், கருவறை உள்ளது.
.
அம்பாள் சன்னதி: முதுகுன்றீஸ்வரரை வழிபடும் மகா மண்டபத்தின் மத்தியில் நின்று வடக்கு நோக்கினால் காண்பது பெரியநாயகி அம்மன் கோயிலாகும். அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தெற்கு ஓரத்தில் பலிபீடம், நந்தி உள்ளன.
கருவறையின் வெளிச்சுவற்றின் தெற்கு கோட்டத்தில் தட்சணாமூர்த்தியாகிய தென்முகக் கடவுள் கல் ஆலின் கீழிருந்து நால்வருக்கு அறிவுரை வழங்குவது போன்றும் வலது காலின் கீழ் முயலகன் கிடக்கும்  கல்வடிவ சிலை உள்ளது.
சுவாமியையும் அம்பாளையும் வழிபட்டு திருச்சுற்று வரும்போது தென்மேற்கில் கன்னி மூல விநாயகர் வீற்றிருக்கிறார்.
முதுகுன்றீஸ்வரர் கருவறையில் வடக்குப் பக்கம் கோமுகத்தின் கீழ்ப்பக்கம் சண்டிகேஸ்வரர் தனி கோவிலில் ஒன்னரை அடி உயரத்தில் தெற்கு நோக்கி உள்ளார்.
சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு வடக்குப் பக்கமுள்ள சன்னதியில் வலது கையில் வேல், அம்பு, வாள், கொடி தண்டுகத்தலும், இடது கையில் வில், வஜ்ரம், தாமரை, மலர்கேடயங்களுடன் முருகன் கிழக்கு நோக்கியுள்ளார். எதிரே தனி பீடத்தில் மயில் உள்ளது.
முருகன் சன்னதிக்கு வடக்குப் பக்கமாக பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. எதிரில், ஒன்றரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
பெருமாள் கோவிலையடுத்து, காசிலிங்கநாத கோவில் உள்ளது. இந்த மண்டபத்தில் தென் பகுதியில் கிழக்கு நோக்கி விநாயகரும், வடக்கு பகுதியில் தெற்கு நோக்கி விசாலாட்சி அம்பாளும் உள்ளனர்.
பெரியநாயகி அம்மன் சன்னதியில் கிழக்குப் பக்கம் துர்க்கை அம்மன் நின்ற கோலத்தில் நான்கு கைகளில், மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரமும், கீழ் வலது கை அபய அமைப்பிலும், இடது கை இடுப்பில் வைத்திருப்பது போன்றும் தனி சன்னதியில் உள்ளார்.
துர்க்கை அம்மன் கோவிலுக்கு கிழக்கே, கோவிலின் நுழைவாயிலில் வடக்குப் பக்கம் தனி கட்டட அமைப்பில் நவக்கிரக சன்னதி உள்ளது. 
இராஜகோபுர உள்மண்டபத்தில் மேற்கு முகம் நோக்கி காலபைரவர்,சூரிய,சந்திரனும் காட்சி தருகின்றனர்.
    
பிரார்த்தனை
    
  கேட்டவர்களுக்கு கேட்டவரம் தரும் வள்ளலாக முதுகுன்றீஸ்வரரும், பெரியநாயகியும் அருள்பாலிக்கின்றனர். 
    
தலபெருமை:
    
  இத்தலத்திற்கு இயற்கை வளம் கொண்ட இரண்டு ஏரிகள், மற்றொன்று சிவன்பால் அன்பு கொண்டு நெஞ்சில் உறுதியோடு வழிபட்டால் கேட்பதைக் கொடுப்பதற்கு எழுந்தருளியிருக்கும் முதுகுன்றீஸ்வரர் மற்றும் பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறார் செம்புலிங்க அய்யனார். 
    
தல வரலாறு:
    
  கி.பி., 12ம் நூற்றாண்டின் இறுதியில் நடு நாட்டினை ஆட்சிபுரிந்த காடவர் தலைவர்களான கச்சிராயர்களில் ஒருவர் முதுநெய் கிராமத்தில் வாழ்ந்தார். இவர், தினமும் திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலத்திற்கு நேரில் சென்று பழமலைநாதர் எனும் விருத்தகிரீஸ்வரரை வணங்கி வந்தார். முதுமை காரணமாக அவரால் விருத்தாசலம் செல்ல முடியாத நிலையை எண்ணி வருந்தியபோது, பழமலை நாதர் (விருத்தகிரீஸ்வரர்) பெரியநாயகியுடன் இவ்விடத்தில் காட்சியளித்ததாகவும், காட்சி கொடுத்த இடத்திலேயே இத்திருக்கோவிலைக் கட்டி வழிபாட்டு வந்த அவர், செலவுக்கு மானியமாக நிலம் கொடுத்ததாக ஐதீகம். 
    
சிறப்பம்சம்:
    
  அதிசயத்தின் அடிப்படையில்: மகா மண்டபத்தின் மத்தியில் நின்று வெவ்வேறு இடங்களிலுள்ள பழமலை நாதர், பெரியநாயகியை ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.
துர்கைக்கு தனிசன்னதி இங்கே மட்டுமே உள்ளது .அதன் மேல் கோபுர விமாணம் மகாமேரு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்தல விருச்சம் கொன்றைமறம் சுமார் 5 தலைமுறைக்கு மேலாக ஒரே அளவில் உள்ளது.
விருத்தாசலத்திற்கு கிழக்கே 20 கி.மீ., தூரத்திலும், நெய்வேலிக்கு மேற்கே 8 கி.மீ., தூரத்திலும் உள்ள முதனை ஏரியின் வடக்குப் பக்கத்தில் கோவில் உள்ளது.

Monday, 8 October 2018

மகள்

மகள்
-----------
உலகை அறிய செய்தார் தாய்,
அவருக்கே கற்பிக்கிறார்
மகள்
== - - -
அன்புடன் வீரா

மழை ஓசை கேட்டு எழுந்தேன்

மழை ஓசைக் கேட்டு எழுந்தேன்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
********மழை ஓசை கேட்டு எழுந்தேன்********

மழை ஓசை கேட்டு எழுந்தேன்.
தவளையின் தாளத்தில் மெய்மறந்தேன்.
மலர்களின் மீது மழைத்துளி படர்ந்ததை கண்டேன்,
அவைகள் நடனமாடுவதை ரசித்தேன்,
தென்றல் காற்றுகள் இசைப்பதை குளிராக உணர்ந்தேன்,

மின்னல் கீற்றுகளும் பளிச்சிடும் முன்னே
பின்னே இடிமுழக்கமும் நான் கேட்டு பயந்தேன்.
குளிருக்கு நடுங்கும் கோழிகளின் இறகில்
அதன் குஞ்சுகள் அடக்கமாய் தஞ்சம் புகுந்ததை பார்த்தேன்.

பட்டாம் பூச்சிகள் அங்கும், இங்கும் சுற்றி வந்து,
பள்ளிக்கொள்ளும் இடத்தை தேடுகையில்
ரீங்காரம் இடும் வண்டுகளும்,
பெயர் கூற தெரியாத எத்தனை எத்தனை பூச்சிகளின்
இன்னிசைகள் காதில் இனிக்கின்றன.

மேற்கத்திய இசை, கிழக்கத்திய இசைகளை கேட்டிருக்கலாம்,
மழை ஓசையில்தான், எத்தனை வகை ஓசை.
எந்த காலத்திலும் கேட்க முடியாத,
பதிய முடியாத இன்னிசை அல்லவா மழை!

பல நாள் வெய்யில், வெம்மையை தணித்து விடுகிறது,
ஒரு நாள் மழை.
பூமி குளிர்ந்து, புது உயிர்கள் துளிர்விடுகிறது,
மழையின் இன்னிசையில்
தன் தாயை பார்த்த பூரிப்பை அடைகிறது, தாவரங்கள்.

-*************அன்புடன் வீரா**************