இரவின் மடியினில் - கிராமம்
-------------------------------
அழகோவியம் படைத்த திருக்கிராமத்தில்
இயற்கை அழகிற்கு பஞ்சமில்லை,
பச்சை பசேல் செழித்திருக்க
பஞ்சம், பட்டினிக்கு இடமில்லை,
அடுக்குமாடி சுகமில்லை,
ஓலைக் குடிசைகளில்
சொர்க்கலோகத்தை தவிர வேறில்லை
இங்கே வாழும் மக்களுக்கோர் நோயுமில்லை, கவலையும் இல்லை,
சுற்றமும் நட்பும் சூழ்ந்திருக்க
நிம்மதியான உறக்கம் இரவின் மடியினிலே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment