Wednesday, 22 November 2017

அன்பின் இலக்கணம்

அன்பின் இலக்கணம்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
பத்துமாதம் சுமந்தெடுத்த தாயும்நீயே!
பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி என்னை
என்றும் நெஞ்சில் சுமந்தவள் நீயே!
தன்குஞ்சு பொன்குஞ்சாய் காத்தவள் தாயே,

நான் பிறந்தப்பின்னும் சுமையானேன்,
பின்னாள் என்னை கட்டிக்கொண்டு
ஓடி, ஆடி சம்பாதித்து,
ஈ, எரும்பெல்லாம் கடித்திடாமல்
என்னை காத்த தாயும் நீயே!

நான் நல்லவனாய் இருப்பது,
தாயே உன்பரிசுத்தமான வளர்ப்பினிலே,
கழனி தண்ணீரை அருந்தியே
என்னாள் உன்னை வருத்தியே,
பண்டம் பாத்திரம் தேய்த்தியே,
வரகரிசி கஞ்சியும் குடுத்தியே !

பண்டிகை காலம் வந்தது,
எனக்கும் புதுத்துணி வாங்கி தந்துவிட்டாய்,
கந்தலாடை நீயும் அணிந்து கொண்டாய்,
உன்அன்பை முழுதும் ஊட்டியே,
அன்பின் இலக்கணம் ஆனாய்தாயே!

நான் என்னகைமாறு செய்திடுவேனோ?
அடுத்த பிறவி நான் எடுத்துவிட்டாள்,
உனக்கு தாய் நான் ஆகிடுவேன்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
                               அன்புடன்
            விருத்தாசலம் இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment