Wednesday, 22 November 2017

அரிசியிலும் போலியை வைத்தான் சீனன்

அரிசியிலும் போலியை வைத்தான் சீனன்

- - - - - - - - _______________----------------
அரிசியிலும் போலியை வைத்தான் சீனன்,
உலகில் போலி முத்திரை பதித்தவன்,
உயிர்களை வாழச்செய்யும் அமிர்தம்,
அதிலும் விஷத்தை கலந்தான்,

புத்தர் கூறிய அமுத மொழிகள் எங்கே,
அவரை தரிசிக்கும் சீனன் அங்கே,
குழந்தை உணவில் விஷத்தை கலந்தான்,
பாலில்கூட கலப்படம் கலந்தான்,

வியாபாரிகள் மனதில் தூபம் போட்டான்,
சீனப்பொருட்கள் மலிவாய் கிடைக்க.
இந்தியப் பொருட்கள் தரமற்று போனதா!
இது இந்திய பெருச்சாளிகளின்
வக்கிரப்புத்தி,
இந்தியனுடன் போட்டிப்போட முடியவில்லை,
அதனால் அவன்செய்யும் ஈனச்செயல்
சீனப்பட்டாசு வெடிக்கையிலே,
சொறிசிரங்கு எல்லாம் வந்ததே!

உலகை அவன் குடையின் கீழ் கொண்டுவர,
அவன் போடும் போலி வேஷம்,
சீனப் பொருட்களை விரட்டியடிப்போம்,
இந்தியப் பொருட்களை,
விரும்பியே வாங்கிடுவோம்,
இது மற்றொரு சுதந்திரப்புரட்சி,
மக்களே வெகுண்டெழுந்திடுவோம்,
சரித்திரம் நாம்படைத்திடுவோம்!
- - - - - - - - - - - - -
                            அன்புடன்
                     இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment