மரியாதை
----------------------------
உயிர் கொடுத்த தாய்க்கு
முதல் மரியாதை செய்திடவேண்டும்,
உதிரம் கொடுத்த தந்தைக்கு
மரியாதை கொடுத்தால் உன்மதிப்பும் உயரும்
எழுத்தை அறிவித்த இறைவனுக்கு மரியாதை செய்திட மறவாதே!
குருவை தொழுதிட நீயும் மறவாதே!
பெரியவர், சிறியவர் வேறுபாடில்லை,
அனைவரின் மதிப்பை நீ பெற
மரியாதை செய்திட தவறாதே!
வளரும் வரை அவர்கள் உதவியே,
வளர்ந்த பின்னே நீசெய்யும் உதவியே,
அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை,
தாயை தொட்டு வணங்கிவிடு,
கழனியில் உழைத்து உன்னைக்காத்த தந்தையின் காலைத்தொட்டு கும்பிடு
தாத்தாப் பாட்டியை மதித்திடு,
வயதில் மூத்தோரை வணங்கிவிடு !
மனைவிக்கூட உன் தாய் தானே,
அவளை மதித்து நடந்திடு
உன் மரியாதைத்தன்மை -அதுவே
உலகில் உன்னை மனிதனாய் உயர்த்தும்!
இப்படியே நீயும் நடந்திடு,
தானாய் உன் மதிப்பும் உயர்ந்திடும்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பணிவண்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment