உலகம் போற்றும் பண்பாடு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
உலகம் போற்றும் பண்பாடுஅது
நம் தமிழ் பாரம்பரியத்தின் வெளிப்பாடு
தன்மானத்தை காத்தவனே தமிழன்
மானம் போனதும் உயிரை துறந்தவனும்
தமிழனே,
வாரிவழங்கும் வள்ளல்கள்
கொண்ட தமிழ்நாடு,
ஈகை என்பதன் அடையாளமாய்
திகழ்வது தமிழ்நாடு
பார் போற்றும் உத்தமர்கள்
வாழ்ந்த நம் நாடு
மனிதநேயத்தை வெளிக்கொணர்வதும்
தமிழ்நாடு.
உடலை மறைத்துக் கட்டுவாள்
சேலை அதனை தமிழச்சி
நாகரிக ஆடையெல்லாம் மாறியது,
சேலை கட்டும் அழகும் எங்கேப்போனது.
வேட்டிக்கட்டிய தமிழன் நடந்து போகையிலே
ஜல்லிக்கட்டுக் காளைக்கூட வேட்டியைப் பார்த்ததும் அடங்கிடுமே,
மேற்க்கத்திய கலாச்சாரம் மாறுது
மக்கள் வேட்டிச்சேலை அங்கே உடுத்திடுது,
இங்கே மேற்க்கத்தியக் கலாச்சாரம் பரவுது
வேட்டித்தினம் கொண்டாடும் காலம் இங்கே வந்தது
உலகம் போற்றும் பண்பாட்டைக்காத்திட வேண்டும்,
தமிழா நீயும் விழித்திட வேண்டும்.
-------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment