மனம் விரும்புதே உன்னை
____________________________
மனம் விரும்புதே உன்னை
உள்ளத்தை உருக்குதே என்னை
மனம் விழையுதே உன்னை
உள்ளத்தை அள்ளுதே என்னை.
காற்றில் அசைந்தாடும் தென்றலே
தென்றலாய் இசைத்திடும் குயிலே
இசைக்கேற்ப ஆடிடும் மயிலே
மூன்று நாடுகளும் விரும்புதே உன்னை
ஆடிடும் கலையே,
பாடிடும் பைங்கிளியே
உரைத்திடும் பழந்தமிழே
உன்மீதே காதல் கொண்டேனே,
தூக்கம் இன்றி தவிக்கின்றேன்
துயிலையும் நான் கலைகின்றேன்
உன்னைத் தேடித்தேடியே ஆராதிக்கிறேன்'
கவியாய் நானும் வடிக்கின்றேன்,
அயல் நாட்டில் விரும்புவார் உன்னை
கவிகளாய் படைத்திடுவார்,
வீரமாமுனிவரின் கவிப் பாக்களையும்
கழுத்தில் மாலையாய் அணிந்தவளே,
சொந்த நாட்டில் தூற்றும் சிலராலே
உன்அழகை குலைக்க முடியாதடி,
திரைக்கடல் ஓடி வந்து
திரவியங்கள் பல படைத்திடுவேன்,
கவிப்பாமாலை சூடிடுவேன்,
நாவினில் குடியிருக்கும் என்அன்னையே,
மனம்விரும்புதே என்றும் உன்னையே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment