Sunday, 5 November 2017

வாடகை வீடு

வாடகை வீடு
_ _ _ _ _ _ _ _ _ _
பாரதிதாசன் சான்றிதழ் போட்டியாளர்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
எட்டடுக்கு மாளிகையில் வசித்தோம்,
சொந்த மாளிகையை விற்றுவிட்டோம்,
வாடகை வீட்டில்  தங்கி விட்டோம்,
ஒரு வீடும் பிடிக்கவில்லை,
இஷ்டம் போல இருக்க முடியவில்லை,
வீட்டுக்கு சொந்தக்காரர்
அதே வீட்டில் வசித்திட்டால்
அவருக்கு அடிமைப் போல
சுதந்திரமாய் பேச முடியவில்லை,
நாய் வளர்க்க ஆசைப்பட்டோம்,
வீட்டுக்காரர் நாயாய் மாறிப் போனார்,
ஆணி அடிக்கக் கூடாது,
புது சட்ட திட்டம் எல்லாம் உண்டு,
சொந்த வீட்டில் வசித்தவனுக்கு
வாடகை வீடு வேதனை வீடு,
மனமெல்லாம் வலித்திடுமே,
வாடகை வீட்டில் குடிபோனேன்
அடகு வைத்தேன் என் சுதந்திரத்தை,
வீட்டுக்காரர் வீட்டிற்கும்
மின் கட்டணம் கட்ட வேண்டும்.
ஆறு மாத முன் பணம்
முன் கூட்டியே கொடுக்க வேண்டும்
மாடாய் உழைத்தப் பணம்
வீதி வீதியாய் வட்டிக்கு சுற்றி வரும்,
மாதம் மாதம் வாடகைப் பணம்
இரும்புப் பெட்டியில் தூங்கிடுமே.
வாடகை வீடு நரக வீடு
ஓலை குடிசை வீடாயினும்
நமக்கென்று சொந்த வீடொன்று
இருந்திட வேண்டும்.
---------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment